பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

225

உடையவர் பிறந்த மகிமை காரணமாகப் பெரும்பூதூர், ஸ்ரீ பெரும்பூதூர் என்றெல்லாம் பிரசித்தி பெற்று விடுகிறது.

அம்பரீஷன் பௌத்திரனான ஹரீதரனுக்கு நேர்ந்த ஒரு சாபம், இத் தலத்துக்கு அவன் வந்து. அனந்த சரஸில் நீராடியதால் நீங்கியிருக்கிறது. அதனால் மகிழ்ச்சியுற்ற ஹரீதரன், ஆதிகேசவப் பெருமாளுக்குக் கோயில் எடுப்பித்து, உத்சவாதிகளை யெல்லாம் ஏற்பாடு பண்ணியிருக்கிறான்.

சென்னையிலிருந்து வரும்போது தூரத்திலேயே கோபுர தரிசனம் செய்யலாம். ரோட்டை விட்டு விலகிக் கோயில் வாசலுக்கு வந்து சேரலாம். கோபுர வாசலுக்கு நேராக உள்ள துவஜ ஸ்தம்பத்துக்குத் தெற்கே இருக்கும் குதிரைக் கால் மண்டபம் வழியாக மேலே ஏறிச் சென்றால், வட பக்கம் இருக்கும் உடையவர் சந்நிதியையம், வாசலுக்கு மேற்கே ஆதி கேசவப் பெருமாள் சந்நிதி

ஸ்ரீ பெரும்பூதூர் கோயில்

யையும் காணலாம்.

கூட வரும் அர்ச்சகர்கள் முதலில் நம்மை உடையவர் சந்நிதிக்கே அழைத் துச் செல்வார்கள். ஆம்! அருளாளரான உடையவர் இங்கே ஆதிகேசவனை விடப் புகழ் பெற்றவராயிற்றே. நாமும் அவரையே முதலில் தரிசித்து, அவர் அருள் பெற்று, அதன் பின் ஆதிகேசவன் அருள் பெற விரையலாம். உடையவர் சந்நிதியில் மூலவர் தெற்கு நோக்கிய திருக்கோலத்தில்

வே-கு : 15