பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

வேங்கடம் முதல் குமரி வரை

இருக்கிறார். அந்த மூலவருக்கு இளையாழ்வார் என்ற பிள்ளைத் திருநாமமே நிலைத்திருக்கிறது. இந்த மூலவருக்கு முன் செப்புச் சிலை வடிவில் இருப்பவரே உற்சவ மூர்த்தி. கூப்பிய கையுடன் இருக்கும் இந்த எம்பெருமானாரைத் தமர் உகந்த திருமேனி என்பார்கள். இராமானுஜரது ஜீவிய காலத்திலேயே, அவருடைய வடிவத்தை அழகாகச் சிற்ப வடிவங்களாகச் செய்து, அவ் வடிவங்களை அவரே ஆலிங்கனம் பண்ணச் செய்து, பிரதிஷ்டை செய்ததாக வரலாறு.

அப்படிப் பிரதிஷ்டை செய்யப் பெற்றவைகளில் மூன்று பிரசித்தமானவை. இப்படி ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை பண்ணியது தானான திருமேனி என்றும், மேல் கோட்டையில் பிரதிஷ்டை செய்தது தான் உகந்த திருமேனி என்றும், இந்த ஸ்ரீ பெரும்பூதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது தமர் உகந்த திருமேனி என்றும் சொல்லப் படுகின்றன.

தானான திருமேனியையும் தானுகந்த திருமேனியையும் : விடத் தமர் உகந்த திருமேனியே அழகானது. பிரசித்தி உடையது.

உடையவரின் உறவினரும் சிஷ்யர்களுமான முதலியாண்டானும், கந்தாடை ஆண்டானும் உவந்து பிரதிஷ்டை செய்த மூர்த்தியானதால், இவரைத் தமர் உகந்த திருமேனி என்கிறார்கள். உடையவரது திருவடியின் கீழ்ச் சடகோபம் இருக்கும். இங்குள்ள சம்பிரதாயம் தெரியாமல், சடகோபம் சாதிக்க வேணும் என்று கேட்கக் கூடாது, அர்ச்சகரை. அப்படிக் கேட்டால் அவர் மிகவும் கோபித்துக் கொள்வார். முதலியாண்டான் சாதிக்க வேணும் என்றே கேட்க வேண்டும். என்றுமே திருவடிதாங்க ஆசைப்பட்ட முதலியாண்டானுக்கு உடையவர் அளித்த கௌரவம் இது.

இந்த உடையவரை வணங்கி விட்டு வெளியே வந்தால், துவஜ ஸ்தம்ப மண்டபம் வந்து சேருவோம். இங்கு நான்கு