பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

233

இக் கல்வெட்டின் ஒரு பகுதியைப் படிக்கிறீர்களா?

'ஸ்வஸ்தி ஸ்ரீமதுரை கொண்ட கோ பர
கேசரி வர்மருக்கு பாண்டு பதினாலாவது
நாள் பதினாறு காளியூர்க்கோட்டத்து
தன்கூற்று உத்தரமேரூர் சதுர்
வேதி மங்கலத்து ஸபையோம்:
இவ்வாண்டு முதல் எங்களுக்குப் பெரு
மானடிகள் எம்பெருமான் ஸ்ரீவீர
நாராயணன் ஸ்ரீபராந்தக தேவன்
ஸ்ரீமுகம் வரக்காட்ட, ஸ்ரீமுகப்படு
ஆக்ஞையால் சோழநாட்டுப்
புறங் கரம்பை நாட்டு, ஸ்ரீவங்க
நகர், காரநிசை கொண்ட யகரமவித்த
பட்டனாசிய, சோமாசிப் பெருமாள் இருந்து
வாரியமாக ஆட்டொருகாலும் ஸம்வத்ஸர
வாரியமும் ஏரிவாரியமும் இடுவதற்கு
வியவஸ்தை செய்த பரிசாவது.......'

குடவோலை கல்வெட்டுள்ள கோயில்

என்ன, போதுமல்லவா! கல்வெட்டுத் தமிழ் என்றால் இப்படித்தான் இருக்கும். இதில் தலை வால் எல்லாம் கண்டு பிடித்துச் சரித்திரம் உருவாக்குவது என்பது சிரம