பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/246

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

வேங்கடம் முதல் குமரி வரை

முடியவில்லை. வருஷா வருஷம் விளைச்சல் இல்லாத காரணத்தால், மக்களிடம் போதிய பணம் வசூலிக்க முடியவில்லை. கோயில் கஜானாவிலும் பலம் இல்லை, அதனால்தான் எடுத்த காரியம் தடைப்பட்டுக் கிடக்கிறது!' என்று சொல்கிறார்கள்.

இதை யெல்லாம் கேட்ட கலெக்டரோ, கொஞ்சம் ஏளனமாகவே, 'என்ன, ஐயா! உங்கள் சாமிக்கு இந்த ஏரி உடையாமல் பார்த்துக் கொள்ளத் தெரியவில்லை. இவருக்கு ஒரு கோயில், இவர் மனைவிக்கு ஒரு கோயில்! இது எல்லாம் வீண் பண விரையந்தானே?' என்று பேசியிருக்கிறார்.

இதைக் கேட்ட அர்ச்சகர்கள் துடிதுடித்து, 'துரைவாள்! இப்படி எல்லாம் சொல்லக் கூடாது. எங்கள் ராமன் இக்கலியுகத்தில் கண் கண்ட தெய்வம். அவனை உள்ளன்போடு ஆராதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டுவதை யெல்லாம் முட்டின்றி அருளுவான்!' என்றெல்லாம் சொல்கிறார்கள்.

ஏரிக்கரை நினைவாகவே இருந்த கலெக்டர் இதைக் கேட்டு, 'சரி. உங்களுக்கும் உங்கள் ராமனுக்குமே ஒரு சவால். நான் உள்ளன்போடு உங்கள் ராமனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இந்த வருஷத்து மழையில் இந்த ஏரிக்கரை உடையாமல் இருந்தால், நானே இந்த ராமன் மனைவி ஜானகிக்குக் கோயில் கட்டித் தருகிறேன். பார்ப்போம், இதை!' என்று சொல்லிவிட்டு, முஸாபரி பங்களாவுக்குத் திரும்பி விடுகிறார்.

அன்றிரவே நல்ல மழை. மறுநாள் காடுமேடு எல்லாம் நீர் வழிந்து ஓடுகிறது. ஏரியில் தண்ணீர் மட்டம் ஏறிக்கொண்டே இருக்கிறது. கலெக்டர் கருணாகரமூர்த்தியை மட்டும் நம்பிச் சும்மா இருந்து விடவில்லை. மராமத்து இலாகா அதிகாரிகள் அத்தனை பேரையும் ஏரிக்கரையில் பல இடங்களில் காவல் போட்டுக் கரை எங்கே உடைத்துக் கொள்ளும் என்று