பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/247

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

245

தோன்றுகிறதோ, அந்தப் பாகத்தை யெல்லாம் பலப்படுத்த முஸ்தீபுகள் செய்கிறார்.

பகல் முழுதும் மழை பெய்கிறது: இரவும் நிற்கக் காணோம். கலெக்டருக்கு ஒரே கவலை, இரண்டாம் நாளும் உத்தியோகஸ்தர்கள் எல்லாம் சோர்வு இல்லாமல் கரையைக் காவல் காப்பார்களா என்று. ஆதலால் அவர்களைச் சடுதி பார்க்க இரவு பத்து மணிக்குக் கலெக்டர் புறப்படுகிறார் - குடை ஒன்றை எடுத்துக் கொண்டு. தாசில்தார், டபேதார் மற்றும் ஊர்க்காரர் சிலரும் கலெக்டர் பின்னாலேயே வருகிறார்கள். எல்லோருமே ஏரிக்கரை மீது நடக்கிறார்கள் - கொட்டுகிற மழையிலே.

கலிங்கல் பக்கம் வந்ததும் துரை தம் கையிலுள்ள குடையையும் தொப்பியையும் எறிந்துவிட்டு, மண்டியிட்டுக் கூப்பிய கையராய்த் தொழுது கொண்டு இருக்கிறார். பக்கத்தில் உள்ளவர்கள் துரை வழுக்கி விழுந்து விட்டார் போலும் என்று எண்ணி, அவரைத் தூக்கி விட முனைகிறார்கள்.

அவரோ, 'அடே முட்டாள்களே! அதோ பாருங்கள். கலிங்கலின் இரு பக்கத்திலும் தேஜோமயமான இரண்டு வீரர்கள் அல்லவா நின்று காவல் புரிகிறார்கள். அவர்கள் வில்லேந்தி நிற்கின்ற அழகுதான் என்ன! முகத்தில்தான் எத்தனை மந்தஹாசம்!' என்று கூவவே ஆரம்பித்து விடுகிறார்.

பக்கத்தில் நிற்கும் பக்தர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. கலெக்டருக்குக் கிடைத்த கோதண்டராம தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. கலெக்டரும் மக்களும் ஊர் திரும்புகிறார்கள்.

அன்று ஏரிக்கரை உடையவில்லை. கலெக்டரும் தான் சொன்ன சொல்லை நிறைவேற்ற மறக்கவில்லை. ஜானகிக்கு ஒரு கோயிலைத் தம்முடைய மேற்பார்வையிலேயே கட்டி முடித்துக் கொடுத்து விட்டுத்தான் தம் தாய் நாட்டுக்குக் கப்பல்