பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

வேங்கடம் முதல் குமரி வரை

டமே கேட்கிறார். இந்தக் கேள்வியே ஒரு நல்ல பாட்ட்டாகப் பிறக்கிறது அவரது நாவிலே.

கோடாத வேதனுக்கு யான் செய்த
குற்றம் என்? குன்றெறிந்த
தாடாளனே! தென் தணிகைக் குமர!
நின் தண்டையந் தாள்
சூடாத சென்னியும் நாடாத
கண்ணும் தொழாத கையும்
பாடாத நாவும் எனக்கே
தெரிந்து படைத்தளனே!

இந்தக் கேள்விக்கு, முருகன் அருணகிரி நாதருக்குப் பதில் சொன்னாரோ என்னவோ, நமக்குச் சொல்கிறான். நாமெல்லாம் வாழ்நாளில் இதே தவறைச் செய்யாது, பிரமனிடமும் - ஏன், குமரனிடமுமே 'நான் செய்த குற்றம் என்?' என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க, வருஷா வருஷம் டிசம்பர் முப்பத்து ஒன்று மாலையிலே நம்மை அங்கே அழைக்கிறான். ஜனவரி முதல் தேதி. ஆம், ஆங்கில வருஷப் பிறப்பன்று; வருஷம் பிறந்தவுடனே நமக்குத் தரிசனம் தருகிறான். நம்மை மகிழ்விக்கிறான்.

தணிகையிலே தடக்கும் உற்சவங்களிலே சிறந்தது. ஆடிக் கிருத்திகை, அன்று பல்லாயிரக் கணக்கான புஷ்பக் காவடிகளைச் சுமந்து கொண்டு மலை ஏறுவது கண் கொள்ளாக் காட்சி. ஆனால் அந்த விழாவினையும் தூக்கி அடிக்கிறது, டிசம்பர் மாதக் கடைசியிலே நடக்கும் திருப்படித் திருவிழா!

இந்த விழாவுக்குச் சென்னையிலிருந்து ஸ்பெஷல் ரயில் புறப்படுகிறது. சென்னை நகரமே திருப்பகழ் மணி அன்பர்கள் தலைமையில் திருத்தணி நோக்கிச் செல்கிறது. 'முருகா முருகா