பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

நரேந்திரர் பின்னர் எவ்வளவு சுடர்ந்த மதியுடையவராக வளர்ந்தார் என்பதும், அரிய தத்துவங்களை யெல்லாம் உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆற்றல் பெற்று, விவேகானந்தர் என்னும் பெயருக்கு ஏற்ப விளங்கினார் என்பதும், நாம் அறிந்ததே.

இந்தச் சம்பலம் ஒரு பெரிய தத்துவத்தையே விளக்குகிறது, எனக்கு. 'பாற்கடலிலே பரந்தாமன் படுத்துக் கிடக்கிறான், அரவணையிலே அறிதுயில் கொள்ளுகிறான் என்றெல்லாம் காத்தற் கடவுளான விஷ்ணுவைக் கலைஞர்கள் கற்பனை பண்ணி யிருக்கிறார்களே, அது சரிதானா?' என்று எண்ணினேன் நான்.

எண்ணிறந்த ஜீவராசிகளையெல்லாம் காத்தளிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள பரந்தாமன், சும்மா கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு, பூலோகத்திலும் வைகுண்டத்திலும் நடக்கும் காரியங்களை யெல்லாம் கண் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தால் காரியம் உருப்படுமா என்ன? ஆதலால் கண்களை மூடி அறிதுயிலில் அமர்ந்து மக்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் என்ன என்ன என்று அறிவதிலே தன் முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறான். இப்பொழுது விளங்குகிறது, அரவணை கிடந்து அவன் ஏன் அறிதுயில் கொள்ளுகிறான் என்று.

இவனையே 'குன்றினில் நின்று வானில் இருந்து நீள் கடல் கிடந்த ஆதிதேவன்' என்று திருமழிசையாழ்வார் பாடுகிறார். இவன் பள்ளி கொள்வதற்குத் தேர்ந்தெடுத்த இடம் கடல், ஆறு, அரங்கம் {ஆற்றின் நடுவிலே உள்ள தீவு).

தமிழ் நாட்டிலே இந்த அரங்கன் துயில் கொள்கின்ற இடங்கள் கிட்டத்தட்ட முப்பதுக்கு மேல் இருக்கும். அவைகளில் அதிமுக்கியமானவை இரண்டே. ஒன்று உத்தர ரங்கம் என்னும் பள்ளிகொண்டான். மற்றொன்று

வே-5:5