பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

வேங்கடம் முதல் குமரி வரை

நோன்பு இருக்கிறார்கள்.சிம்மக் குளத்தில் முழுகுகிறார்கள். விழுந்து வணங்கி அருள் பெறுகிறார்கள்.

சென்ற வருஷம் கார்த்திகைக் கடை ஞாயிறு அன்று நான் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அன்று இப்படிப் பிரார்த்தனை செய்த பெண்கள் இரண்டாயிரம் பேருக்குக் குறைவில்லை என்று கண்டேன்.

'என்ன? எண்ணிப் பார்த்திரோ?' என்றுகேளாதீர்கள். சிம்மக் குளத்தில் முழுகி எழுவதற்கு உரிய சீட்டு நபர் ஒன்றுக்கு எட்டணாக் கட்டணம் கட்டித்தான் பெற வேண்டும். இந்தச் சீட்டு விற்பனைஉரிமையைக் குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள். அந்த வருஷத்துக் குத்தகைப் பணம் ரூபாய் ஆயிரம். விசாரித்ததில் குத்தகைக்காரருக்கு நஷ்டமில்லையாம். இப்போது என் கணக்கும் சரிதானே. இன்னும் சந்தேகம் உள்ளவர்கள் அடுத்த கார்த்திகைக் கடை ஞாயிறு விழாவுக்கே சென்று பார்த்து விடலாமே.

இந்த விரிஞ்சிபுரத்திலே கோயில் கொண்டிருப்பவர் மார்க்க சகாயரும் மரகதவல்லியும். வழித்துணை நாதர் - பச்சைப் பசுங்கொடி என்ற நல்ல தமிழ்ப் பெயரைத்தான் மார்க்க சகாயர் மரகதவல்லி என்று நீட்டி முழக்கிச் சொல்கிறார்கள். இந்தத்லத்து இறைவன் குடகு நாட்டிலே இருந்து தொண்டை நாட்டுக்கு மிளகு விற்க வந்த சிவநேசன் என்னும் வியாபாரிக்கு வழித் துணையாக வந்து, வழிப்பறி செய்ய வந்த திருடர்களையெல்லாம் விரட்டி அடித்தான் என்பது புராண வரலாறு.

வழித் துணை என்ற பெயர் தான் எவ்வளவு அழகான பெயர். மக்கள்செல்லும் நெறியில் எல்லாம் வழித்துணையாக இறைவன் வருகிறான். செல்லும் வழியிலுள்ள காமம், குரோதம், லோபம் முதலிய திருடர்களை யெல்லாம் வெல்வதற்குத் துணை புரிகிறான் என்று கற்பித்து, இறைவனை வணங்குவதிலேதான் எத்தனை இன்பம். 'பயந்த