பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

79

தனி வழிக்குத்துணை முருகனது வடிவேலும் செங்கோடனது மயூரமுமே' என்று அருணகிரியார் தெரியாமலா பாடுகிறார்!

விரிஞ்சிபுரம் கோபுரம்

இந்த வழித்துணைநாதர் பாலாற்றின் தென்கரையில் உள்ள சிறிய ஊரில் இருக்கிறார். இந்தச் சிறிய ஊரில்தான் மார்க்க சகாயரின் பெரிய கோயில் இருக்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம், கிரி, காடு முதலிய அமைப்புகளோடும் நாளும் ஞாயிறு வழிபட நிற்கும் காரணத்தால் பாஸ்கரத் தலம் எனவும், பூகைலாயமெனவும் ஸ்தல புராணத்தில் கூறப்படுகிறது. சதுரங்க, பஞ்சாக்கர கோண அமைப்புடைய மாடவீதிகள், அஷ்ட திக்கு மண்டபங்கள் எல்லாம் நிறைந்து, கோயில் அழகாக இருக்கிறது.

கோயிலில் உள்ள கல்வெட்டுகளால் 1239ஆம் ஆண்டில் இரண்டாம் குலோத்துங்கன் பிரதிநிதியாய் இவ்வட்டாரத்தில் ஆண்ட ராஜராஜ சாம்புவராயரால் கோயில் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. பின்னர் விஜயநகர சாம்ராஜ்யத்தை உருவாக்கிய கிருஷ்ண தேவராயரால், ராஜகோபுரம் கட்டப்பட்டிருக்கிறது. 1523இல் இந்த நாயக்க மன்னர்கள் மரபில் வந்த சின்னப் பொம்மன் என்ற லிங்கப்ப நாயக்கரால், இக் கோயில் செப்பனிடப்பட்டிருக்கிறது.

இக் கோயிலின் மதில் அழகாக அமைந்திருக்கிறது. 'திருவாரூர்த் தேரழகு, திருவிரிஞ்சை மதில் அழகு என்பது