பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

89

தஞ்சைப் பெரிய கோயில்; மற்றொன்று திருவாரூர்க் கோயில், இந்தக் கோயிலைப் பூங்கோயில் என்று அழைக்கிறார்கள். கோயில் வாயிலிலே அர்ச்சகர்கள் நம்மிடம் சொல்லுவார்கள் : முத்தி தரும் தலங்கள் மூன்று, அவை சிதம்பரம், காசி, ஆரூர் என்பன. அவற்றுள் காண முத்தி தருவது சிதம்பரம், இறக்க முத்தி தருவது காசி, பிறக்க முத்தி தருவது ஆரூர் (நாமோ இந்தப் பிறவியில் திருவாரூரில் பிறக்கவில்லை காசி சென்று இறக்கவோ நம்மில் எல்லோருக்கும் வசதி இருப்பதில்லை. ஆனால் நமக்கு முத்தி நிச்சயம். நாம் தாம் இதற்கு முன்னமேயே சிதம்பரம் சென்று தில்லைச் சிற்றம் பலவனைக்கண்டு தொழுதிருக்கிறோமே.)

ஆரூரில் பிறக்கும் அதிர்ஷ்டம் பெற்றவர்களை நினைத்துப் பொறாமைப் பட்டுக் கொண்டே கோயிலுள் செல்லலாம். கோயில், கோயில் பிரகாரங்கள் அங்குள்ள மண்டபங்களையெல்லாம் பார்த்தால் அது மிகப் பழைய கோயிலாகத் தெரியும். எவ்வளவு காலத்துக்கு முந்திய கோயில் என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. என்னால் மாத்திரந்தானா முடியவில்லை. ஆயிரத்து இரு நூறு வருஷங்களுக்கு முன் இருந்த அப்பராலேயே சொல்ல முடியவில்லையே. அவர் கூட!

மாடமொடு மாளிகைகள் மல்கு
தில்லை மணிதிகழும் அம்பலத்தே
பன்னிக் கூத்தை

ஆடுவான் புகுவதற்கு முன்னோ ?
பின்னோ ? அணியாரூர்
கோயிலாய்க் கொண்ட நாளே?

என்று அந்த இறைவனிடமே கேட்டிருக்கிறார்; விடை. கிடைத்ததோ என்னவோ? கோயிலை நான்கு பக்கத்தும் நான்கு கோபுரங்கள் அணி செய்கின்றன. கீழைக்கோபுரம் 118 அடி உயரம். காம்பீரியம் இருக்காது. சட்டிபோல் அகன்று