பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

வேங்கடம் முதல் குமரி வரை

பரந்திருக்கும். மற்றையக் கோபுரங்கள் எல்லாம் அளவில் சிறியவை. வடக்குக்கோபுரம், அந்தக் குலோத்துங்கன் படைத் தலைவராம் கருணாகரத் தொண்டைமான் திருப்பணி, அவருடைய சிலையிருக்கிறது கோபுரத்துச் சுவரிலே. கோயிலுக்குள் நுழைந்ததும் உயர்ந்த நீண்ட கம்பங்கள் மொட்டை மொட்டையாக நின்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அதுவே ஆயிரங்கால் மண்டபம் என்னும் தேவாசிரிய மண்டபம் என்பர்.

விழாக் காலங்களில் மட்டுமே அந்தக் கம்பங்களின் பேரில் ஓலை வேய்ந்து மண்டபம் அமைத்துக் கொள்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு மூன்று பிரகாரங்கள். ஒவ்வொன்றுமே பெரிய பிரகாரங்கள்தான். மூன்றாம் பிரகாரம் ஆகிய வெளிப்பிரகாரத்தில் மூன்று கிணறுகள் இருக்கின்றன. ஒன்றின் பெயர் மூக்குத்திக் கிணறு, முத்தி தீர்த்தம் என்ற பெயர் மூக்குத்தி தீர்த்தம் என்று சிறப்படைந்திருக்கிறது போலும்! இப்பிரகாரத்தில் தான் பக்த காட்சி மண்டபம், ஊஞ்சல் மண்டபம் எல்லாம் இருக்கின்றன. இனி இந்தப் பிரகாரத்திலுள்ள ஆரியன் கோபுர வாயில் வழியாகத்தான் இரண்டாம் பிரகாரத்துக்குச் செல்ல வேண்டும். அரி அயன் கோபுரம் என்பதே ஆரியன் கோபுரம் என்று மாறி இருக்கிறது (இதை வைத்துக்கொண்டு ஆரியர் திராவிடர் சண்டைகளுக்கு ஆதாரங்கள் தேட வேண்டாம்)

இந்த இரண்டாம் பிரகாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறு சிறுகோயில்கள். திருவாரூர் அறநெறி, அசலேசம், ஆனந்தேசம், விசுவகர்மேசம், சித்தீசம் முதலிய கோயில்கள் இருப்பது இங்கே தான் - ஒரு கோயிலைக் கண்டு கும்பிட முனைந்தால், கும்பிடும் கையைக் கீழே போட வேண்டியதில்லை பிரகாரம் சுற்றி முடியும்வரை.. இதைத் தெரிந்திருக்கிறார் மகாவித்வான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை, *குவித்தகரம், விரித்தல் செலாக் கோயில்களும் பல உளவால்' என்று கூறுகிறார். இந்தப் பிரகாரத்தில் உள்ள அழகியான்