பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

91

கோபுர வாயிலைக் கடந்துதான் வன்மீகநாதர் சந்நிதிக்கு வந்து சேரவேணும். மூலவர் அவர்தானே. அவர் எழுந்தருளியிருக்கிற கருவறையைத் திருமூலட்டானம் என்றே வழங்குகின்றனர்; கோயில் என்றால் சிதம்பரம் என்பது போல, திருமூலட்டானம் என்றால் இந்தத் திருவாரூருக்கே உரியது. இங்குள்ளவர் புற்றிடங் கொண்டவர். பஞ்ச பூத ஸ்தலங்களில் இது பிருதிவித் தலம் ஆயிற்றே. இக்கருவறையை அடுத்தே சோம குலாம்பிகை என்னும் பிரியா விடையம்மை இருக்கிறார்.

இந்த வன்மீகநாதரை விடப் புகழ் பெற்றவர் இங்குள்ள தியாகேசர். வன்மீகநாதர் கோயிலுக்கு வலப்புறம் உள்ள தனிச் சந்நிதியில் இருக்கிறார் இவர். இவர் இங்கு எழுந்தருளியதற்கு ஒரு புராண வரலாறு உண்டு. சிவபெருமானையும் உமா தேவியையும் குமரக் கடவுளையும் ஒரே ஆசனத்திலிருத்தி இறைவனை சோமாஸ்கந்த மூர்த்தமாக வழிபடுகிறார் திருமால். இந்த சோமாஸ்கந்தத்தைத் தேவேந்திரன் திருமாலிடம் பெற்று, அதற்குத் தியாகப் பெருமான் என்று பெயரிட்டுச் சிறப்பாகப் பூசனை செய்து வருகிறான். இந்தத் தேவேந்திரனுக்குத்தான் அடிக்கடி அசுரர்களது உபத்திரவம் உண்டே வலன் என்ற அசுரனுடன் போர் செய்தபோது சோழமன்னன் முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரனுக்குத் துணை நின்று வெற்றியைத் தந்திருக்கிறான்.

இதற்குப் பரிசாக இந்திரனிடம் தியாகப் பெருமானையே கேட்டிருக்கிறான். கொடுக்க மனம் இல்லாத இந்திரன், தியாகப் பெருமானைப் போலவே ஆறு உருவங்களைச் செய்து அதில் எதையாவது எடுத்துப் போகச் சொல்லியிருக்கிறான். இறைவன் அருளால் முசுகுந்தன் தேவேந்திரன் பூசித்த தியாகரையே இனம் காட்டியிருக்கிறான். அதன் பின்னும் இல்லையென்று சொல்ல இயலுமா? தியாகர் வந்திருக்கிறார் தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்து திருவாரூரில் கோயில் கொண்டிருக்கிறார். மற்றைய ஆறு