பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

93

இந்தத் தியாகருக்கும், அந்த வன்மீகநாதருக்கும் இடையே இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் ஐங்கலக் காசு விநாயகர். அழகிய சோழன் ஒருவன் ஐந்து கலம் பொற்காக கொண்டு வடித்தான் என்பது வரலாறு. இவரையும் தரிசித்தபின் இரண்டாம் பிரகாரம் வந்து அங்குள்ள அம்மன் கோயிலில் தெற்கு முகமாக இருக்கும் நீலோத்பலாம்பிகையையும் தரிசிக்கலாம். கையில் செண்டு ஒன்று ஏந்தி நின்ற கோலத்தில் இருக்கும் இந்த அல்லியங் கோதையின் பக்கத்திலே, தோழி ஒருத்தி தோள்மீது முருகனைச் சுமந்து நிற்பதையும் அம்மை தனது இடது கரத்தால் முருகனது சுட்டு விரலைப் பிடித்திருப்பதையும் காணத் தவறி விடாதீர்கள். மற்றக் கோயில்களில் எல்லாம் இல்லாத தனிச்சிறப்பு. இது நீலோத்பலாம்பிகை தவிர, தனிக்கோயிலில் கமலாம்பிகை தவக்கோலத்தில் இருக்கிறாள். இரண்டு திருக்கரங்களுடன் கால்மேல் கால் போட்டு யோகாசனத்தில் அமைந்த இந்த அம்பிகை அழகானவர். பராசக்தி பீடங்களில் இதுவும் ஒன்று

கமலாலயம் - கோயில் கோயில்

'திருவாரூர்த் தேர் அழகு' என்பது பழமொழி. தமிழ் நாட்டில் உள்ள தேர்களில் எல்லாம் பெரியது. இந்தத் தேரைப்போல் 'மாடல்' ஒன்று செய்து அதைச் சென்னை மியூசியத்தில் வைத்திருக்கலாம். அத்தனை அழகு அந்தத் தேர். இந்தத் தேரையும் மிஞ்சிய புகழுடையது, இக்கோயிலுக்கு மேல் பக்கத்திலுள்ள கமலாலயம் என்னும் திருக்குளம் ஐந்து வேலி, குளம்