பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

வேங்கடம் முதல் குமரி வரை

ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்று கணக்கு. வேலி 6.66 ஏக்கர் என்றால் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்களேன் குளத்தின் பரப்பை, இந்தக் குளக்கரையிலே ஒரு பிள்ளையார் மாற்றுரைத்த பிள்ளையார் என்ற பெயரோடு. அன்று சுந்தரர் விருத்தாசலம் மணி முத்தாற்றில் இட்ட பொன்னைக் கமலாலயத்தில் இறைவன் எடுத்துக் கொடுத்த போது அந்தப் பொன்னின் மாற்றை உறைத்துச் சரி பார்த்தவர் இவர். இன்னும் இந்தக் கோயிலைச் சுற்றி எத்தனையோ கோயில்கள், கோயிலுக்குக் கீழ்ப்பக்கத்திலே மனுநீதிச் சோழன் வரலாற்றை விளக்கும் கல்தேர், கல் பசு, கன்று எல்லாம் இருக்கின்றன.

இத்தலத்துக்குப் பலவகையாலும் வரலாற்றுத் தொடர்பு உடையவர்கள் சுந்தரர், சேரமான் பெருமாள். இவர்கள் இருவரும், தியாகேசரது திருமுன்பு எதிர்முக மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். இவர் இருவரில் சுந்தரரோடு தொடர்பு கொண்ட ஏயர்கோன் கலிக்காமர் விறன்மிண்டர், சோமாசி மாறர், இன்னும் இங்கிருந்து முத்திபெற்றவர் நமிநந்தி, செருத்துணை, தண்டியடிகள், கழற் சிங்கர் முதலியோர். இவர்கள் சரித்திரம் விரிக்கில் பெருகும் என்றாலும் சுந்தரர் பரவையாரோடு இங்கு நடத்திய இல்லறத்தைப் பற்றிச் சொல்லாது போனால் திருவாரூர்ச் சிறப்பை முழுவதும் சொல்லியதாகவும் ஆகாதே. ஆதலால் அதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

நாவலூரிலே பிறந்து வெண்ணெய் நல்லூரிலே இறைவனுக்கு ஆட்பட்டு அவனோடு தோழமை பூண்டு, தம்பிரான் தோழராக வாழ்ந்தவர் கந்தரர். அவர் இந்தத் திருவாரூருக்கு வந்து, இங்கு அவதரித்திருந்த பரவையாரை மண்ந்து குடியும் குடித்தனமுமாக இருந்தவர். அந்த 'வாளான கண் மடவாள் வாடி வருந்தாமல் குண்டையூரிலே நெல் பெற்று' அதைக் கூட. அள்ளிக் கொண்டு வந்து திருவாரூரில் போட இறைவனையே ஏவியிருக்கிறார். இதையெல்லாம்