பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11. கீழ்வேளூர் கேடிலியப்பர்

ர்நாடக சங்கீத மும்மணிகளில் ஒருவர் ஸ்ரீமுத்து சாமி தீக்ஷிதர். இவருடைய தந்தை ராமசாமி தீக்ஷிதர் வைத்தீசுவரன் கோயில் முத்துக்குமரன் சந்நிதியில் நாற்பது நாட்கள் தவங்கிடந்து பெற்றிருக்கிறார் இவரை. இவர் தம் தந்தையிடமே சங்கீதம் கற்றுக் கொண்டவர். கர்னாடக சங்கீதத்தில் மாத்திரம் அல்ல, வடக்கே காசி போயிருந்த போது ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் பத்ததியையுமே நன்கு தெரிந்து கொண்டிருக்கிறார். 'யமுனாகல்யாணி ஜம்பூபதே' 'ஸௌந்திரராஜம் ஆச்ரயே' என்ற இரண்டு கீர்த்தனங்களிலும் தம் வடநாட்டு இசைப்பழக்கத்தை நன்கு காட்டி யிருக்கிறார்.

திருத்தணிகை சென்று மெய்ம்மறந்து முருகனைத் தியானித்திருக்கும்போது ஒரு சிறுவன் இவர் வாயில் கற்கண்டைப் போட்டது போல் கனவு கண்டிருக்கிறார். அன்றைய தினத்திலிருந்து அற்புதம் அற்புதமான கீர்த்தனங்களைப் பாடத் துவங்கியிருக்கிறார். தீக்ஷிதர் கீர்த்தனங்களின் விசேஷம் என்னவென்றால், தலங்களின் மகாத்மியங்கள், இறைவன் இறைவி பெயர், அங்குள்ள தீர்த்த விவரம் எல்லாம் ஏதோ அட்டவணையிட்டுக் கூறுவது போல்