பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

99

கீழ் வேளூர், திருவாரூர் நாகப்பட்டினம் ரஸ்தாவில் திருவாரூருக்குக் கிழக்கே ஏழுமைல் தொலைவில் உள்ள சிறிய ஊர். காரிலும் போகலாம்; ரயிலிலும் போகலாம். கீழ்வேளூர் என்றெல்லாம் சொன்னால் ரயிலில் டிக்கெட் வாங்க முடியாது. கீவளுர் என்றுதான் சொல்லி டிக்கெட் கேட்க வேண்டும். ரயில்வேயில் மாத்திரம் என்ன, பஸ்ஸிலுமே அப்படித்தான். ஊர்க்காரரும் நெடுஞ்சாலைப் பொறியர்களும் கீவளூர் என்றுதானே ஊரை அழைக்கிறார்கள். குமரனாம் வேளுக்குத் தேவ உலகத்தில் ஓர் ஊர், பூலோகத்தில் ஓர் ஊர் என்று ஏற்பட்டிருக்கின்றன. தேவலோகத்திலுள்ள ஜரை மேல்வேளூர் என்றும் அழைத்திருக்கிறார்கள் என்பது புராண வரலாறு.

ரோட்டு வழியாகச் சென்றால், தெற்கு நோக்கித் திரும்ப வேணும் கோயில் செல்ல. ரயில் வழியாக வந்தால் வடக்கு நோக்கி வரவேணும். ஊர் சிறியதுதான் என்றாலும் கோயில் பெரிய கோயில். நல்ல உயர்ந்த மதில்களும் கோபுரங்களும் உண்டு. கோயில் மாடக் கோயில், சோழன் கோச்செங்கணான் கட்டிய எழுபது மாடக் கோயில்களில் இது ஒன்று. வெளிப்பிரகாரத்தில் சுதையால் செய்த பெரிய நந்தி கொடிமரத்தை அடுத்திருக்கிறது. இது சந்நிதியை விட்டுத் தென் பக்கம் கொஞ்சம் விலகியிருக்கிறது. இங்கும் நந்தன் போல் ஒரு பக்தன் வந்தானா? அவனுக்காக இறைவன் தந்தியை விலகச் சொன்னாரா என்று அதிசயிப்போம். இங்கு வந்தவன் பக்தன் அல்ல, ஒரு பக்தை. இவளுக்காக, இவள் கற்பு நிலையை மக்களுக்குத் தெரிவிக்கவே, நந்தி விலகி இருக்கிறது. சுதை இதுதான்.

கோயிலில் பூசை செய்து வந்த ஆதிசைவர் ஒருவர், தம் மனைவியுடன் வாழ்கிறார். அந்த மனைவி கருவுற்ற இரண்டாவது மாதத்தில் ஆதி சைவர் இறந்து விடுகிறார். கருமுற்றி உரிய காலத்தில் ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தப் பையன் வளர்ந்து கற்க வேண்டியதைக் கற்றுச் சிவாகம்