பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வேங்கடம் முதல் குமரி வரை

இதுதான். கயிலையில் நடக்கவிருந்த இறைவன் திருமணக்கோலம் காண எல்லோருமே வடதிசை செல்ல, அதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயருகிறது. இந்த உயர்வு தாழ்வைச் சமன் செய்ய இறைவன் குறுமுனியாம் அகஸ்தியரைத் தென் திசைக்கு அனுப்புகிறார். தம் திருமணக் கோலத்தோடு தென் திசை வந்து அகஸ்தியருக்குத் தரிசனம் தருவதாகவும் வாக்களிக்கிறார். அதன்படியே தென் திசை வந்து அகஸ்தியர் பொதிகையில் தங்குகிறார். இறைவனும், இறைவி உமை சகிதம் தென்திசை வந்து கீழ்வேளூரில் தரிசனம் கொடுக்கிறார் (இந்தத் திருமணக் கோலக் காட்சியை இன்னும் பல தலங்களில் காட்டியதாக அந்தத் தல வரலாறு கூறும்),

இப்படித் திருமணக் கோலங் காட்டியபோது கீழ்வேளூரில் இருந்த அகஸ்தியருக்கு மட்டும் ஒரு பேராசை,

கால்மாறியாடியவர்

தாண்டவக் கோலத்தையும் தரிசிக்க வேண்டுமென்று. அகஸ்தியர் வேண்டியபடியே தாண்டவக் கோலத்தில் ஒரு புதிய கோலத்தை ஆம், கால் மாறி ஆடிய கற்பகமாக நின்று காட்சி கொடுக்கிறார். கால் மாறி ஆடியதற்கு மதுரைத் திரு விளையாடல் புராணத்தில் ஒரு வரலாறு உண்டு. அப்படிப்பாக அங்குள்ள வடிவம் ஒரு நல்ல தாண்டவத் திரு உருவம் கல்லிலே. இங்கு கீழ் வேளூரில் இருப்பது செப்புச் சிலைவடிவில். கால் மாற்றியிருப்பதைத் தவிரத் தாண்டவமாகவே இல்லை. இறைவன் ஆடியது எழுவகைத் தாண்டவம்