பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

103

என்பர். அவற்றுள் எந்தத் தாண்டவத்திலும் வைத்து எண்ணப்படத்தக்கதில்லைதான். என்றாலும் ஆனந்தத் தாண்டவக் கோலத்தையே கோயில்கள் தோறும் பார்த்த நமக்கு, கலை அன்பர்களுக்கு ஒரு நல்விருந்து இப்புதிய நடராஜ வடிவம்.

அந்த நடனராஜனையும் சிவகாமியையும் தரிசித்த பின்னர் அர்த்த மண்டபத்தில் சென்று அக்ஷயலிங்கரை வணங்கலாம். அப்படி வணங்கும்போது ஓதுவார் ஒருதேவாரம் பாடுவார்.

சொல் பாவும் பொருள் தெரிந்து
தூய்மை நோக்கி, மனத்திருளை
வாங்காதானை,

நல் பான்மை அறியாத
நாயினேனை நன்னெறிக்கே
னசெல்லும் வண்ணம் நல்கினானே!

பல்பாவும் வாயாரப் பாடி ஆடி,
பணிந்து எழுந்து, குனிந்து
அடைந்தார் பாவம் போக்க

இல்ப்பானைக் கீழ் வேளூர் ஆளும்
கோவை, கேடு இலியை
நாடும் அவர் கேடிலாரே

என்று அப்பர் தேவாரமாக இருக்கும். இதில் இறைவனைக் 'கேடு இலி' என்பானேன் என்று கேட்கத் தோன்றும். க்ஷயம் என்றால் கேடு; அ என்றால் இல்லை. ஆதலால் அக்ஷயலிங் கரைக் கேடிலி என்று தமிழ்ப்படுத்துவது எவ்வளவு அழகு. இத்தலத்துக்கு வந்த சம்பந்தரும் சுந்தரரும் இத்தலத்தில் உள்ள இறைவனைக் கீழ் வேளூரான் என்று மட்டுமே பாட, அப்பர் மட்டும் அவனைக் 'கேடிலி' என்ற ஒரு நல்ல பெயராலேயே அழைக்கிறார்.