பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

வேங்கடம் முதல் குமரி வரை

இனி, கோயில் மாடத்தை விட்டுக் கீழே இறங்கலாம். பிரமன், இந்திரன், அக்கினி, யமன் இன்னும் எண்ணிறந்தோர் அங்கு வழிபட்டு முத்தியடைந்திருக்கிறார்கள் என்பர் அர்ச்சகர்கள். அதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க நமக்கு நேரம் இருக்காது. அப்பர் சொல்லியதைவிட, இந்த அர்ச்சகர்கள் என்ன புதிதாகச் செய்துவிடப் போகிறார்கள்? இந்தக் கோயிலின் வடபக்கத்தில் தனிக் கோயில் கொண்டிருக்கும் இறைவியைத் தரிசிக்க வேண்டாமா? ஆம்! அவளே சுந்தர குசாம்பாள்; அவளையே வனமுலை நாயகி என்று சம்பந்தர் தேவாரத்தில் குறிப்பிடுகிறார். அப்பர் இறைவனுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயர் கொடுத்தால், சம்பந்தர் இறைவிக்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயர் கொடுக்கிறார். இவளையே பதரி வன மூல நாயகி என்றும் அழைக்கிறார்கள். இந்த இடமே இலந்தைக் காடாகத் தான் இருந்திருக்கிறது அன்று. அது காரணமாக இத்தல விருக்ஷம் கூட, இலந்தை மரமாகத்தானே இன்றும் இருக்கிறது. அம்பிகை இடது கையைத் தொடையில் வைத்து வலது கையைத் தூக்கி அபயம் அளிக்கும் கோலம் காணக் காண அழகு பயப்பது. ஆனால் இன்னும் கொஞ்சம் நட்ந்து கீழ்ப் பக்கம் வந்தால், இந்த சுந்தர குசாம்பிகையே, காளி உருவில் அஞ்சு வட்டத்து அம்மன் என்ற பெயரில், வடக்கு நோக்கியவளாய்த் தனிக் கோயிலில் இருப்பதைப் பார்க்கலாம்.