பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12. சிக்கல் சிங்கார வேலவர்

பால்நினைந்து ஊட்டும் தாயினும்
சாலப் பரிந்து, நீ
பாவியேன் உடைய

ஊனினை உருக்கி, உள்ஒளி
பெருக்கி, உலப்பு இலா
ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம்புறம்
திரிந்த செல்வமே!
சிவபெருமானே!

யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப்
பிடித்தேன்; எங்கு எழுந்து
அருளுவது இனியே?

என்று மாணிக்கவாசகர் பாடுகிறார் அவரது திருவாசகத்தில். இந்தப் பிடித்த பத்து என்னும் பத்துப் பாட்டிலும் நான் உன்னை 'சிக்' எனப் பிடித்தேன் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். இந்தப் பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு ஓர் ஐயம். “திருப் பெருந்துறைக்கு மன்னனுக்காகக்