பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

வேங்கடம் முதல் குமரி வரை

அந்தப் பிடியின் வலியை உணர்ந்தே, 'நான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே?' என்று இறைவனிடமே கேட்கிறார். அவன் என்ன சொல்லக் கூடும்? ‘ஆம். நானுந்தான் வந்து பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டேன். இனி, உனக்காக நரியைப் பரியாக்க வேண்டியதுதான். பரியை நரியாக்க வேண்டியதுதான் இன்னும் என்ன என்ன செய்து எவனிடம் எல்லாம் பிரம்படிபடவேண்டியிருக்கிறதோ? யார் கண்டார்கள்?' என்றுதானே சொல்லியிருப்பான். இத்தனை எண்ணமும் என் உள்ளத்தில் ஓடுகிறபோது, எனக்குச் சிக்கல்' ஞாபகம் வரும். சிக்கல் சிங்கார வேலவர் ஞாபகம் வருவார்.

இந்த வேலவர் மிகவும் நல்லவர் ஆயிற்றே. இவர் ஏன் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழும். விசாரித்தால் இங்கே சிக்கிக் கொண்டிருப்பவர் சிங்கார வேலவர் அல்ல. அவருடைய தந்தையாரான வெண்ணெய் லிங்கேசுரரே என்று அறிவோம். அவர் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ளகூடியவர்தான். ஏன் சிக்கலில் அகப்பட்டுக் கொண்டார் என்று தெரிய வேண்டாமா? அதற்குச் சிக்கல் தலவரலாற்றைப் பார்க்க வேண்டும்.

இந்தத் தலத்திலே ஒரு குளம். பால் குளம் என்று பெயர் (இன்றும் இருக்கிறது, அதே பெயரில், ஆனால் அங்கிருப்பது தண்ணீர்தானே ஒழியப் பால் இல்லை.) அதில் அன்று பால் நிறைந்திருக்கிறது. வசிஷ்டர் இந்தக் குளக்கரைக்கு வந்திருக்கிறார். பால் குளத்திலுள்ள பாலை எடுத்துக் காய்ச்சி நிறைய வெண்ணெய் எடுத்திருக்கிறார். அந்த வெண்ணெயாலேயே லிங்க உரு அமைத்துப் பூசித்திருக்கிறார். வெண்ணெய் லிங்கரை அப்படியே விட்டு விட்டுப்போக மனம் வருமா? அவரைத் தம்முடன் எடுத்துச் செல்ல விரும்பிப் பெயர்க்க முனைந்திருக்கிறார். ஆனால் அவரோ பிரதிஷ்டை பண்ணிய இடத்திலேயே சிக்கிக் கொள்கிறார். இடத்தை அவர் 'சிக்' எனப்