பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிடித்துக்கொள்கிறார். பாவம்! வசிஷ்டர் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறார்.

இப்படி இந்த வெண்ணெய்ப்பிரான், நவநீத ஈசுவரர் சிக்கிக்கொண்ட இடம்தான் சிக்கல். இவர் இப்படி இருந்த இடத்திலேயே சிக்கிக்கொண்டால், இவரது குமாரனாம் சிங்காரவேலவனும் எத்தனையோ பக்தர்கள் உள்ளத்திலே சிக்கிக் கொண்டிருக்கிறான். இப்படி ஒரே சிக்கல் மயம்தான் அங்கு, அந்தச் சிக்கலுக்கே செல்லுகிறோம் நாம் இன்று.

சிக்கல் தஞ்சை நாகூர் ரயில்லைனில் திருவாரூருக்குக் கிழக்கே பன்னிரெண்டு மைல் துரத்தில் இருக்கிறது. வசதியாக ரயிலிலே செல்லலாம். 'சிக்கல்' என்ற பெயரோடு விளங்கும் ரயில்வே ஸ்டேஷனில் இயங்கி இரண்டு மூன்று பர்லாங்கு நடந்தால் போதும். கோயில் வாசலில் வந்து சேரலாம். இல்லை, 'எங்களுக்குக் கார் வசதி எல்லாம் உண்டு' என்று சொல்கிறவர்கள் திருவாரூர் நாகப்பட்டினம் ரஸ்தா வழியாகவும் வரலாம். ரோடும் ரயிலும் அடுத்தடுத்து ஒரே கதியில்தான் செல்கின்றன. கோயில் வாயிலை எண்பது

அடி உயரமுள்ள ஏழு நிலைக் கோபுரம் அழகு செய்கிறது. ஆனால் இந்தக் கோபுரத்தையும் முந்திக்கொண்டு ஒரு கல்யாண மண்டபம் இருக்கிறது. இதனைக்கல்யாண மண்டபம் என்று கூறுவது சரியல்ல. கல்யாணக் கொட்டகை என்று வேண்டுமானால் சொல்லலாம். அது ஒரு பெரிய தகரக் கொட்டகை. இரு பக்கமும்பெரிய இரும்புத் தூண்கள் நிறுத்