பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வேங்கடம் முதல் குமரி வரை

திப் பிரும்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள், 1932-ம் வருஷம்தான் கட்டி முடித்திருக்கிறார்கள். அப்போது அதனை 'காரனேஷன்ஹால்' என்று அழைத்திருக்கிறார்கள், உற்சவ காலங்களில் கலை அரங்காக உபயோகிக்கிறார்கள். தகரக் கொட்டகை ஆனதால் இன்னிசை எல்லாம் கேட்க இயலாது. எல்லாம் தகர ஓசையாகவே இருக்கும். என்னைக் கேட்டால் இந்த இடத்தில் இந்தத் தகரக் கொட்டகையைக் கட்டியிருக்கக்கூடாது, இனி என்ன செய்ய? இருந்து விட்டுப் போகட்டும். அதனைச் சிரமப்பட்டுப் பார்க்க வேண்டியதில்லை. உண்மையில் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லைதான்.

இனிக் கோயிலுள் நுழையலாம்; நுழைந்ததும் கிருத்திகை மண்டபம்வந்து சேருவோம். ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று சிங்கார வேலவர் தமது மனைவிமார் இருவருடன் எழுந்தருளி இங்கு நீராட்டப் பெறுவார். அப்போது கூட்டம் 'ஜாம் ஜாம்' என்று இருக்கும். மற்ற வேளையெல்லாம் காலியாகவே கிடக்கும். இந்த மண்டபத்தையும் கோயிலையும் பார்த்தால் திருப்பணி சமீபகாலத்தில்தான் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றும். விசாரித்தால் அன்று சோழன் செங்கணான் கட்டிய இம்மாடக் கோயிலை முப்பத்தைந்து வருஷ காலம் இந்தக் கோயில் தருமகர்த்தராக இருந்த தெக்கூர் திரு. கருமுத்து அழகப்பச் செட்டியார் எட்டு லட்ச ரூபாய் செலவில் புதுப்பித்திருக்கிறார் என்பார்கள். புதுப்பிப்பது என்ன, புதிதாகவே கட்டியிருக்கிறார்.

சமீபத்தில்தான் சிறப்பாகக் கும்பாபிஷேகம் இங்கு நடந்திருக்கிறது. இதையெல்லாம் தெரிந்து கொண்டே உள்ளே செல்லலாம். எல்லா மாடக் கோயில்களிலும் உள்ளது போல் கட்டு மலை மேலே நவநீதேசுவரர் இருக்கிறார். இவர் இருக்கும் இடத்தைத் தேவகோட்டம் என்கிறார்கள். படிக்கட்டின் பக்கத்தில் சுந்தர கணபதி இருக்கிறார். அவரை வணங்கிப் பன்னிரண்டு படி ஏற வேணும். ஏறினால்