பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

111

சோமாஸ்கந்தர் நம்முன் நிற்பார்; இல்லை, உட்கார்ந்திருப்பார். அந்த மண்டபத்துக்குச் சென்று அங்கிருந்து வெண்ணெய்ப் பிரானைத் தரிசிக்கலாம். அவரே சிக்கலில் சிக்கிக் கொண்டவர். நம்மையும் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டி விடுவதற்கு முன்பே வெளிவந்து விட வேணும்.

வெளி வரும்போது நடராஜருக்கும் ஒரு வணக்கம் செலுத்தலாம். அதன் பின்னும் நடந்தால் சிங்கார வேலவர் காட்சி கொடுப்பார். அவர் செப்புச் சிலை வடிவில் வெள்ளை மஞ்சத்தில் நின்று கொண்டிருப்பார். இரு புறமும்வள்ளியும் தெய்வயானையும் நிற்பார்கள். எல்லோரும் தங்கக் கவசமும் வைர நகைகளும் அணிந்து கொண்டிருப்பார்கள். இத்தனை அழகுடன் இருக்கும் இவர்கள் இருக்கும் இடம்தான் என்னவோ போல் இருக்கும். இத்தாலியப் பளிங்குக் கற்களை வாங்கித் தரையில் சுவரில் எல்லாம் பதித்து அழகு செய்திருப்பார்கள்.