பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13. கடல் நாகைக் காரோணர்

தொண்டை மண்டலம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக உருவாவதற்குக் காரணமாக இருந்தவன் தொண்டைமான் இளந்திரையன். அவன்தன் புகழைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற சங்கப் புலவர் பெரும்பாண் ஆற்றுப் படையிலே பரக்கப் பாடுகிறார்.

இருநிலம் கிடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த்
திரைதரு மரபின், உரவோன் உம்பல்.
மலர்தலை உலகத்து மன்உயிர் காக்கும்
முரக முழங்கு தானை மூவருள்ளும்
இலங்குநீர் பரப்பின் வளைமிக் கூறும்
வலம்புரி அன்னவசை நீங்கு சிறப்பின்
அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்
பல்வேல் திரையன்.

என்று பாராட்டப் பெறும் இளந்திரையன் வரலாற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டாமா? சோழ நாட்டிலே கிள்ளி வளவன் என்று ஓர் அரசன் இருக்கிறான். இளவயதிலே