பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

அவன் கடல் கடந்து செல்கிறான். அப்படிச் சென்றவன் நாகர் உலகத்துக்கே போகிறான்; அங்கு பீலிவளை என்ற நாக கன்னியைக்கண்டு காதலிக்கிறான். அந்த வட்டாரத்திலே கிடைத்த தொண்டை மலர்களை மாலையாக்கி அவளுக்கு அணிவித்துக் காந்தர்வ மணம் புரிந்து கொள்கிறான். பீலிவளையுடன் கூடியிருந்த தலைவன் கிள்ளிவளவன் தன் நாடு திரும்புகிறான். அவளை அறவே மறந்து விடுகிறான். பீலிவளையோ நல்ல ஆண் மகனைப் பெற்றெடுக்கிறாள், அவன் வளர்ந்து வாலிபமாகிறான். தான் சோழன் மகன் என்பதை அறிகிறான்.

அன்னையின் அனுமதியோடு கடல் கடந்து சோழ நாட்டுக்கு வருகிறான். கிள்ளி வளவனைக் கண்டு அரசுரிமை கேட்கிறான். அவன் அணிந்து வந்த தொண்டை மாலையால் உண்மையை உணர்கின்ற சோழ மன்னன், சோழ நாட்டையே இரு கூறாக்கி வட பகுதிக்குத் தொண்டை மாலை அணிந்து வந்த தொண்டையனை அரசனாக்குகிறான். கடல் அலைகொண்டு வந்த இளைஞன் ஆனதினால் அவனை இளந்திரையன் என்கின்றனர் மக்கள். இப்படித்தான் தொண்டைமான் இளந்திரையன் தொண்டை மண்டலத்தின் முதல்வனாகிறான் என்று பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன. இந்த இளந்திரையன் நாகர் உலகத்திலிருந்து வந்து சோழ நாட்டில் கரை ஏறிய இடம்தான் நாகப்பட்டினம். இந்தக் கடற்கரைக்கு நாகப்பட்டினம் என்று பெயர் பெறுவதற்குப் புராண வரலாறும் ஒன்று உண்டு.

ஆதிசேடனுக்கு ஒரு மகள் ; அவள் சூரியகுலத் தோன்றலாம் சாலீசுக மன்னனைக் கண்டு காதலிக்கிறாள். ஆதிசேடன் இருவருக்கும் மணம் முடித்து வைத்துவிட்டுப் பூலோகத்துக்கு வந்து விடுகிறான். வந்து ஒரு நகரைச் சிருஷ்டித்து அங்கு இறைவனையும் பிரதிஷ்டை பண்ணி வணங்குகிறான். நாக அரசன் உருவாக்கிய பட்டினம் நாகப்பட்டினம் என்று பெயர் பெறுகிறது. அவன் ஸ்தாபித்த

வேமுகம் - 9