பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

119

பெறுவானேன்? யமுனைக் கரையில் கருத்தமர் என்ற முனிவரின் புத்திரனாகப் புண்டரீகர் பிறந்து வளர்கிறார். பல தலங்களைத் தரிசிக்கிறார். குடந்தையிலே, ராமர் ருத்திர அம்சம் பெற விரும்பியபோது இறைவன் அவர் உ.டலிலே ஆரோகணித்துக் கொண்டார் என்பதை அறிகிறார்.

இவர் நாகப் பட்டினம் வந்ததும் இறைவனைத் தரிசித்துத் தம்மை அவர் உருவில் ஆரோகணித்துக் கொள்ள வேண்டித் தவங் கிடக்கிறார். புண்டரீகரது தவத்துக்கு மெச்சி அவரது காயத்தைத் தம்மேனியோடு ஆரோகணித்துக் கொள்கிறார். இப்படித் தான் காயாரோகணர் நாகையில் உருவாகியிருக்கிறார். இந்தக் காயாரோகணரே பின்னர் தம் பெயரைக் காரோணர் என்று சுருக்கிக் கொண்டிருக்கிறார். ஆம்! வேங்கடாசலபதியை வே.பதி என்றம், சந்திர சேகரை ச.சேகர் என்றும் குறுக்கி மகிழ்கின்றவர் பெருகியிருக்கிற காலத்தில் வாழ்கின்றவர் அல்லவா?

காரோணரைப் பற்றி இவ்வளவு தெரிந்து கொண்ட பின் கோயிலுக்குள் செல்லலாமே. கோயில் கிழக்கு நோக்கிய கோயில். கோயில் வாயிலிலே நீண்டு உயர்ந்த கோபுரம் இருக்காது. முற்றுப்பெறாத மட்டக் கோபுர வாயில் வழியாகத்தான் உள்ளே செல்லவேணும். உள்ளே சென்றதும் நம்மை எதிர்கொண்டு வரவேற்பவர் தல விநாயகரான நாகாபரணப் பிள்ளையார். ஐந்து தலைப் பாம்பு ஒன்று அழகாகக் குடை பிடிக்கும் பாவனையில் பிள்ளையாருக்குப் பின்னால் இருக்கும். ஏதோ பல லிங்கத் திருவுருவுக்குத்தான் நாகாபரணம் என்றில்லை, பிள்ளையாருக்குமே உண்டு என்று சொல்லும் பாவனையில் அமைந்திருக்கும் தலம் நாகப்பட்டினம் அல்லவா? அங்குள்ள விநாயகருக்கு நாகாபரணம் இல்லாமல் இருக்குமா? அவருக்குப் பின்புறந்தான் நந்தி; கல்லுருவில் அல்ல, சுதை உருவில்தான். ஒரு சிறு மண்டபத்துக்குள்ளே அதையும் நாற்புறமும் இரும்பு வேலியிட்டுப் பதனப்படுத்தியிருப்பார்கள். இந்த நந்திக்கு