பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

121

யாரை எல்லாம் கண்டு தொழலாம். இந்தப்பிரகாரத்தின் வடபகுதியிலேதான், தசரதனே பிரதிஷ்டை செய்த சனிசுவரன் வேறே தனித்து நிற்பார். இன்னும் கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் எல்லாமே ஒரே வரிசையில் மேற்கு நோக்கியே 'கார்ட் ஆப் ஆனர்' கொடுத்துக்கொண்டு நிற்பார்கள். ஒருவருக்கு ஒருவர் வக்கரித்துக்கொண்டு நிற்கமாட்டார்கள். இதை அடுத்தே சங்க மண்டபம்; அந்த மண்டபத்தின் மேற்கிலேதான் தியாகராஜரும், காயாரோகனரும். தியாகராஜர் பூலோகத்துக்கு எழுந்தருளிய வரலாற்றைத் தான் திருவாரூரிலேயே கண்டு கொண்டோமே, அங்குள்ளவர் வீதிவிடங்கர் என்றால் இங்குள்ளவர் சுந்தரவிடங்கர். அங்கு நடந்தது அசபா நடனம் என்றால் இங்கு நடந்தது தரங்க நடனம். இங்கு தியாகராஜர் திருவாரூரில் உள்ள கோலாகலத்தில் இருக்க மாட்டார். அந்தக் கோலாகலம் எல்லாம் திருவாரூர் தியாகராஜருக்கென்றே ஏற்பட்டவை. என்றாலும் இந்தத் தியாகராஜரையும் வணங்கிவிட்டு வடக்கு நோக்கி நடந்தால், மூலவராம் காயாரோகனர் சந்நிதி வந்து சேருவோம். நல்ல வடிவில், லிங்கத் திரு உருவில் இருப்பார்.

அங்கு கருவறைச் சுவரிலே காயாரோகனருக்குப் பின்னாலே இருப்பவர் ஆதிபுராணர். சோமாஸ்கந்தர், அகஸ்தியர் முதலிய ஏழு முனிவர்களக்குக்காட்சி கொடுத்த கோலம். கயிலையில் நடந்த திருமணக் கோலத்தை அகத்தியருக்கு மட்டுந்தான் காட்டுவதாக எக்ரிமெண்டு, அவருடன் மற்ற ஆறுமுனிவர்களும் சேர்ந்து கொண்டால் எல்லோருக்கும் தரிசனம் கொடுத்துத் தானே ஆக வேண்டும். ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கெல்லாம் அருள் செய்பவன் ஆயிற்றே. ஆதலால் தான் நமக்குத் தரிசனம் கொடுக்கிறார். காயாரோகணரையும், சோமாஸ்கந்தரையும் வணங்கிவிட்டு வெளியே வரும்போது, மண்டபத்தின் ஒரு பகுதியை இரும்புக் கிராதிகள் போட்டு, அதைப் பத்திரமாகப் பூட்டியும் வைத்திருப்பதைப் பார்ப்போம். அந்த நீண்ட சிறு