பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

123

பெருந்தலை பத்தும். இருபது
தோளும் பிதிர்ந்து அலற
இருந்தருளிச் செய்ததே,
மற்றுச் செய்திலன் எம் இறையே!

என்பது அப்பர் தேவாரம். இந்தச் சுந்தரர் இருக்கிறாரே அவர் கருமமே கண்ணாயினர். எங்கு சென்றாலும் தனக்கு என்ன என்ன வேண்டும் என்பதைக் கேட்கத் தவறமாட்டார். கேட்டதை வாங்காமலும் போகமாட்டார். கடல் நாகைக் காரோணம் மேவியிலிருந்த பெருமானிடம் அவர் கேட்கும் பொருள்களின் 'ஜாபிதா' வைப் பாருங்களேன். அதையும் தனக்கெனக் கேட்காதவர் போலவுமே பரவை சங்கிலியாருக்காவே கேட்பவர் போலவுமே வினயமாகக் கேட்கிறார்.

பண்மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் :எனக்கும் பற்றாய பெருமானே!
மற்று யாரை உடையேன்?

உண்மயத்த உமக்கு அடியேன் குறைதீர்க்க
வேண்டும், ஒளிமுத்தம், பூணாரம்
ஒண்பட்டும் பூவும்

கண்மயத்த கத்தூரி, கமழச் சாந்தும் வேண்டும்.

என்று ஜாபிதாவை நீட்டிக் கொண்டே போகிறார். சமயக் குரவர் நால்வருள்ளும் இவர்தானே கோலாகலமாக வாழ்வு நடத்தியவர். வேண்டும் பொருள்கள் பலவாக இருத்தல் வியப்பில்லையே. இன்னும் இத்தலத்தில்தான் அறுபத்து மூவரில் ஒருவரான அதிபத்தர் வாழ்ந்திருக்கிறார். பரதவர் குலத்தில் பிறந்த இவர் மீன் பிடிக்கும் தொழில் நடத்தியிருக்கிறார். தம் வலையில் அகப்படும் முதல் மீனைச் சிவபெருமானுக்கு என்று விட்டு விட்டுப் பழகியிருக்கிறார். ஒரு தடவை பொன் மீனே முதல் மீனாகக் கிடைத்திருக்கிறது.