பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

வேங்கடம் முதல் குமரி வரை

அதையுமே இறைவனுக்கு விட்டிருக்கிறார். இவர் அன்பை உணர்ந்து இவருக்குத் தரிசனம் தந்து இவரை ஆட்கொண்டிருக்கிறான் இறைவன், அதிபத்தர் கெட்டிக்காரர்தான். தம் வலையில் கிடைத்த மீனை விட்டு, பக்தி வலையில் பரமனையே பிடித்துப் போடக் கற்றிருக்கிறாரே. இவர் வாழ்ந்த இடம் செம்படவர் சேரியாம். நம்பியாங்குப்பம் என்கிறார்கள். அங்கு அதிபத்தர் கோயில் ஒன்று மண் மேட்டில் புதைந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இன்னும் இத்தலத்தில் காயாரோணகர் கோயிலை ஒட்டிய சுற்றுக் கோயில்களும் பல உண்டு. அவகாச உடையவர்கள் எல்லாம், அமரநந்தீசர் கோயில், கைலாச நாதர் கோயில், கட்டியப்பர் கோயில், விசுவநாதர் கோயில், குமார் கோயில் முதலிய கோயில்களுக்குச் சென்று வணக்கம் செலுத்தலாம்; இந்தக் கோயில்களுக்கு எல்லாம் செல்ல அவகாசம் இல்லாதவர்களும் மேற்கு நோக்கிக் கொஞ்சம் எட்டி நடந்து சௌந்தரராஜப் பெருமாளைத் தரிசிக்காமல் மட்டும் திரும்பக் கூடாது. உண்மையில் அங்கு மூலமூர்த்தியாக நிற்கும் சௌந்தரராஜன், சுந்தரமாக அழகுடையவர், நாகராஜனுக்குப் பிரத்யக்ஷமாகி அனுக்கிரகித்திருக்கிறார். அங்கு தனிக்கோயிலில் சௌந்தரவல்லித் தாயார் வேறே இருக்கிறாள். சுந்தரராஜனைத் திருமங்கை மன்னன் பத்துப் பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்திருக்கிறான்; வாழ்த்தி வணங்கியிருக்கிறான்.

வாழியரோ இவர்! வண்ணம்
எண்ணில் மாகடல் போன்றுஉளர்
கையில் வெய்ய

ஆழி ஒன்று ஏந்தி ஓர்
சங்கு பற்றி அச்சோ
ஒரு அழகிய வா?