பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14. செம்பியன்மாதேவிக் கயிலாயர்

சில வருஷங்களுக்கு முன் நான் ஒரு சித்திரம் பார்த்தேன். அந்தத் சித்திரத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய விக்டோரியா மகாராணி கம்பீரமாக வீற்றிருந்தாள். ஆம் பதினெட்டு வயதிலேயே அரியாசனத்து அமர்ந்து எண்பது வயதுக்கு மேலும் இருந்து ஆட்சி புரிந்தவள் அல்லவா அவள், அவளது எண்பதாவது வயதில் எழுதிய சித்திரம் அது, அவளுடன் அவளது மகன் எட்வர்ட் இருந்தார். அவர்தானே அப்போது வேல்ஸ் இளவரசர். பின்னர் தானே ஏழாவது எட்வர்ட் ஆக அவர் முடிசூடினார். இன்னும் படத்தில் எட்வர்ட் மகன் ஜார்ஜ் இருந்தார். அவர் மகன் எட்வர்ட். இருந்தார் (இவர்கள் தாம் பின்னர் ஐந்தாம் ஜார்ஜ், எட்வர்ட் என்று சரித்திரத்தில் கணக்கிடப்பட்டவர்கள்). இந்தச் சித்திரத்துக்கு அடியில் 'நான்கு தலைமுறை' என்று எழுதியிருந்தது.

விக்டோரியா மகாராணியின் காலத்திலே அவளது பூட்டன் எட்வர்ட் பிறந்து வளர்த்து பருவம் எய்தியதால், நான்கு பேரையும் நிறுத்திப் படம் எழுதி நான்கு தலைமுறை கண்ட ராணி அவள் என்று பெருமைப்பட்டுக்