பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

வேங்கடம் முதல் குமரி வரை

என்னும் பெயரால் நிர்மாணிக்கப்பட்ட தலத்துக்கும், அங்குள்ள கயிலாயநாதர் கோவிலுக்குமே செல்கிறோம் நாம் இன்று.

செம்பியன்மாதேவி என்பது தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் தாலூக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமம். திருவாரூர் நாகப்பட்டினம் ரயில் பாதையில் கீழ் வேளூர் ஸ்டேஷனில் இறங்கி வண்டி வைத்துக்கொண்டு ஆறு மைல் தென்கிழக்காகச் சென்றால் இத் தலத்துக்கு வந்து சேரலாம். கீழ் வேளூருக்குத் தெற்கே இரண்டு மைலில் தேவூர் என்னும் தலம் இருக்கிறது. அங்கு இறங்கி, அங்குள்ள மதுரா பாஷிணி அம்மையோடு கோயில் கொண்டிருக்கும் தேவபுரி ஈசுவரரை வணங்கலாம். அத்துடன் அங்குள்ள செப்புச் சிலை வடிவில் இருக்கும் கல்யாண சுந்தரத்திருக்கோலத்தையும் காணலாம். கலை உலகில் காண வேண்டிய வடிவம் அது. இந்தத் தேவூருக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார்.

ஓதி மண்டலத்து ஓர் முழுது
உய்ய வெற்பு ஏறு
சோதி வானவன் துதிசெய
மகிழ்ந்தவன் தூநீர்த்
தீது இல் பங்கயம் தெரிவையர்
முகமலர் தேவூர் ஆதி சேவடி அடைந்தனம்,
அல்லல் ஒன்று இலமே

என்று பாடிவிட்டே நடந்திருக்கிறார். நாம் அந்தத் தேவூர் இறைவனின் ஆதிசேவடியை வணங்கிவிட்டு மேல் நடந்தால்தான் அல்லல் ஒன்றும் இல்லாமல் செம்பியன் மாதேவி போய்ச் சேரலாம். சில வருஷங்களுக்கு முன் இந்தத் தலம் செல்வதென்றால் மிகவும் கரடு முரடான பாதையில் தான் செல்லவேண்டியிருக்கும். இப்போது பாதையெல்லாம்