பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

வேங்கடம் முதல் குமரி வரை

சோழனும், பேரன் ராஜராஜனும் இவரது பணியைச் சிறக்கச் செய்திருக்கிறார்கள் என்றால் வியப்பில்லை. இவர் தம் மாமனார் முதல் பராந்தக் சோழர் காலத்திலேயே அதாவது கி.பி. 941-ம் ஆண்டிலேயே திருச்சிராப்பள்ளியை அடுத்த உய்யக் கொண்டான் மலை என்னும் திருக்கற்குடி மகாதேவருக்கு ஒரு நுந்தா விளங்கு எரிக்கத் தொண்ணூறு ஆடுகளை அளித்திருக்கிறார். இவர் சோழ நாடு முழுவதும்

சுற்றிப் பல தலங்களில் இறைவனை வணங்கியிருக்கிறார். பல கோயில்கள் செங்கற்களால் கட்டப்பட்டு நாளா வட்டத்தில் சிதைந்து போவதைக் கண்டு அவைகளைக் கற்கோயில்களாகக் கட்ட முனைந்திருக்கிறார். அப்படி இவர் கற்றளிகளாகப் புதுப்பித்தவை பத்து என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. திரு நல்லம் என்னும் கோனேரி ராஜபுரம், விருத்தாசலம், திருவாரூர் அறநெறி, திருமணஞ்சேரி , தென்குரங்காடு துறை, திருக்கோடிக்கா, ஆநாங்கூர், திருத்துருத்தி என்னும் குத்தாலம், திருவக்கரை என்னும் கோயில்கள் எல்லாம் கற்றளிகளாக மாறியது இவரது திருப்பணியினால்தான்.