பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

133

அருள்மொழித் தேவவளநாடு, அதனுள் அடங்கியது அளநாடு. அந்த நாட்டிலே இந்தச் செம்பியன் மாதேவி சதுர்வேதி மங்கலம் தோன்றியிருக்கிறது. நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்களுக்குப் பிரமதேயமாக, செம்பியன் மாதேவியார் இந்த நாட்டை வழங்கியிருக்கிறார்.

ஸ்ரீ கைலாயம் என்னும் இக்கோயிலையும் கட்டியிருக்கிறார். உத்தமசோழர் காலம் (கி.பி. 970) முதல் சடையவர்மர் வீரபாண்டியன் காலம் (கி.பி. 1268) வரை இக்கோயிலுக்கு ஏற்பட்ட நிபந்தங்கள் அனந்தம். மற்ற வரலாறுகளைப் பற்றிய தகவல்களுக்கும் குறைவில்லை சரித்திர ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு இங்குள்ள கல்வெட்டுக்கள் மிக்க பயனுடையதாக இருக்கும். செம்பியன் மாதேவியார் செய்த திருப்பணிகளைப் பாராட்டி. அவருக்கு உரிய வணக்கத்தைச் செலுத்துவதற்காகவே இந்தக் கோயிலுக்குப் போகலாம்.

இக்கோயிலைச் சுற்றி அந்த வட்டாரத்திலே நிறையக் கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயிலுக்குத் தெற்கே ஐந்து மைல் தொலைவில் குண்டையூரும் அதையடுத்து திருக்குவளை என்று வழங்கும் கோளிலியும் இருக்கின்றன. குண்டையூரில்தான் சுந்தரர் இறைவனிடம் நெல் பெற்றிருக்கிறார். அந்த நெல் குவையை அள்ளிக் கொண்டு போய்த் திருவாரூர் பரவையார் வீட்டில் சேர்க்க இறைவனிடமே ஆள் வேண்டியிருக்கிறார். அவரும் இந்தப் பணியை முகங்கோணாது செய்திருக்கிறார். கோளிலி சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று. அவனிவிடங்கத் தியாகர் பிருங்க நடனம் ஆடியிருக்கிறார் இங்கே. இக் கோயிலுக்குப் பக்கத்திலே எட்டிக்குடி.. ஆம், எட்டிக் குடி வேலாண்டி இசை உலகில் பெயர் பெற்றவனாயிற்றே. இன்னும் இச் செம்பியன்மாதேவிக்குத் தென்மேற்கே ஆறு மைல் தொலைவில் வலிவலம் என்னும் தலம் இருக்கிறது. கரிக்

வே.மு.கு.வ - 10