பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

137

இருப்பவர் மறைக் காடரும் அவரது துணைவி யாழைப் பழித்த மொழியாளும். இப்போதெல்லாம் கோயில் வாயில் திறந்தேயிருக்கும். அன்று வேதங்கள் பூஜித்துத் திருக்காப்பு செய்த கதவைத்தான் அப்பர்,

பண்ணின் நேர் மொழியாள்
உமை பங்கரோ!
மண்ணினார் வலஞ்செய்
மறைக் காடரோ!
கண்ணினால் உமைக்
காணக் கதவினை
திண்ணமாகத்
திறந்தருள் செய்ம்மினே!

என்று பாடித் திறந்து வைத்திருக்கிறாரே, திறந்த கதவை அப்படியே திறந்தே நின்று விடாமல் பின்னர் அடைக்கவும் பாடியிருக்கிறார் சம்பந்தர்.

சதுரம் மறைதான்
துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில் ஆல்
மறைக்காட்டு உறைமைந்தா
இது நன்கு இறை வைத்து
அருள் செய்க எனக்கு உள்
கதவம் திருக்காப்புக்
கொள்ளும் கருத்தாலே.

என்பது சம்பந்தரது தேவாரம், இந்தத் தலத்தில் மணலெல்லாம் லிங்கமாவும் நீர் எல்லாம் தீர்த்தமாகவும் கருதப்படுகின்றன. இங்குள்ள கடல் வேததீர்த்தம் என்றே கூறப்படுகிறது, அதனால் இத் தலத்தையே ஆதிசேது என்பர். சீதையை மீட்கச் சென்ற ராமன் முதல் முதல் அணை கட்டத் தேடி எடுத்த இடம் இதுதான். அப்போது அங்கு வசித்த