பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/152

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

வேங்கடம் முதல் குமரி வரை

பறவைகளும் பிராணிகளும் வேதவன ஈசுவரரிடத்திலே ஆட்சேபித்திருக்கின்றன. அவரும் அக்காரியத்தில் தலையிட்டுச் சேதுவைத் தேவி பட்டணத்தருகே கட்டுவது தான் எளிது, நல்லது என்று கூறியிருக்கிறார். இது காரணமாவே ராமனும் சேதுவில் அணையைக் கட்டியிருக்கிறான்.

இன்னும் இலங்கை சென்று இராவணனை வதம் செய்து திரும்பி, ராமன் ராமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதும் இங்கே தான் என்று தலபுராணம் கூறுகிறது. ராமனைப் பிடித்திருந்த பிரமஹத்தி தோஷமும் இந்தக் கோயிலில் உள்ள வீரஹத்தி விநாயகரை வழிபட்ட பின்னரே நீங்கிற்று. இந்த வீரஹத்தி விநாயகர் இக்கோயிலின் மேல் பிரகாரத்தில் இருக்கிறார். இத்தல விநாயகரோ சிந்தாமணிகணபதி. இக்கோயிலுக்குப் பகல் வேளையில் செல்வதைவிட இரவில் செல்வதே நல்லது. அப்பொழுதுதான் அங்கு சந்நிதியிலும் மற்ற இடங்களிலும் ஏற்றும் விளக்குகளைப் பார்க்கலாம். 'திருவாரூரில் தேர் அழகு' என்பது போல

‘வேதாரண்யத்தில் விளக்கழகு' என்பது பழமொழி ஆயிற்றே. இந்த விளக்குகளையெல்லாம் கடந்து கருவறைப்பக்கம் சென்றால் மறைக்காடு உறையும் மணாளரைக் காணலாம். அது என்ன இந்த மூர்த்தி மட்டும் மணாளர் என்ற பெயரோடு விளங்குகிறார் என்று கேட்போம். அதற்கு அந்தப் பழைய கதையையே சொல்வார்கள். பரமேசுவரனுக்கும் பார்வதிக்கும் நடக்கும் கல்யாணத்தைக் காணத் தேவரும் பிறரும் கயிலையில் கூட அதனால் வடதிசை தாழ, அதைச் சரி செய்ய இறைவன் அகஸ்தியரைத் தென் திசைக்கு அனுப்ப, பின்னர் அவர் விரும்பியபடியே தென் திசை வந்து மணக்கோலத்திலேயே காட்சி கொடுத்தார் என்றும் தெரிந்திருக்கிறோம் அல்லவா? அதே கதை தான் இங்கும் நடந்திருக்கிறது. இக்கதையைத் தென் தமிழ் நாட்டில் உள்ள பல கோயில்களில் கேட்கலாம். என்றாலும்