பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

141

யாழைப் பழித்தன்ன மொழி
மங்கை ஒருபங்கன்
பேழைச் சடைமுடிமேல் பிறை
வைத்தான் இடம்பேணில்
தாழைப் பொழில் ஊடே சென்று
பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக் குரங்கு
உண்ணும் மறைக்காடே.

என்பதுதானே அவரது தேவாரம், ஆதலால் நாமும் மறவாது யாழைப் பழித்த மொழியாள் சந்நிதிக்கும் சென்று வணங்கலாம். இத்தலம் எழுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்று. இந்த இடமே சுந்தரிபீடம் என்பர். மென் மொழியாள் மாத்திரம் அல்ல. அழகாலுமே மற்றவர்களை வெல்லும் பெருமை பெற்றவள் இந்த அம்பிகை. இத்துடன் இங்குள்ள துர்க்கையின் சந்நிதியும் மிகுந்த சாந்நித்யம் வாய்ந்தது. இங்குள்ள காட்சி கொடுத்த நாயகர் என்னும் செப்புப் படிமமும் காணவேண்டிய கலை வடிவம்.

இன்னும் இத்தலத்திலே ஒரு சிறப்பு இந்தக்கோயிலில் விளக்கு அழகு என்பதை முன்னரே சொன்னேன். அந்த அகல் விளக்குகளுக்கு எல்லாம் நெய் ஊற்றியே விளக்கேற்றி யிருக்கிறார்கள் அந்தக் காலத்தில், அப்படி ஊற்றிய நெய்யை உண்ண ஓர் எலி வந்திருக்கிறது. உண்ணும் பொழுது சுடர் அதன் மூக்கில் பட்டிருக்கிறது. அதனால் திரி தூண்டப்பட்டிருக்கிறது. அணையும் தறுவாயிலிருந்த விளக்கைத் தூண்டிப் பிரகாசிக்கச் செய்த காரணத்தால், அந்த எலியை மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாய்ப் பிறக்க அருள் செய்திருக்கிறார் மறைக்காடர்.

இத்தனை பிரசித்தியடன், இத்தலம் பெருமக்கள் புலரது பிறப்பிடமாகவும் இருந்திருக்கிறது. திருவிளையாடல்