பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16. சீரார் பெருந்துறையான்

படிக்கும் திருப்புகழ் போற்றுவன்,

கூற்றுவன் பாசத்தினால்

பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல்

என்பாய் பெரும் பாம்பில் நின்று

நடிக்கும் பிரான் மருகா, கொடுஞ்

சூரன் நடுங்க வெற்பை

இடிக்கும் கலாபத் தனிமயில்

ஏறும் இராவுத்தனே.

என்று அருணகிரியார் மயில் ஏறும் மாமுருகனைக் கந்தர் அலங்காரத்திலே பாடுகிறார், அந்தப் பாட்டைப் பற்றி இரண்டு முருக பக்தர்களிடையே ஒரு விவாதம். 'ஏன் ராவுத்தன் என்று பாடியிருக்கிறார்? என்றைக்கு இந்த முருகன் முஸ்லிம் ஆக ‘கன்வெர்ட்' ஆனார்? என்பது ஒருவர் கேள்வி. மற்றவரோ, 'அப்படியெல்லாம் முருகனை முஸ்லீம் ஆக்கிவிடவில்லை அருணகிரியார். சர்வசமய சமரச பாவத்தை வளர்க்கும் தமிழ் மக்கள் முருகனையும் ராவுத்தன் என்று அழைத்துத் தம் சமரச மனோபாவத்தை