பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

147

இருக்கிறது. அதற்கே அபிஷேக ஆராதனைகள் எல்லாம். அப்படிப் பீடமாகிய ஆவுடையார்க்கே முக்கியத்துவம் கொடுத்து, பூசை நடப்பதினால் தான் ஆவுடையார் கோயில் என்று வழங்குகிறது. இப்படி இறைவனும் இறைவியும் அரூபமாக இருப்பதனால்தானோ என்னவோ இங்கு நந்தி கிடையாது, கொடிமரம் கிடையாது, சண்டீசரும் இல்லை.

இந்த கோயிலில் பிரதான்யம் எல்லாம் சமயக் குரவர் நால்வரில் ஒருவரான மணிவாசகருக்கே. ஆதலால் அவர் சரிதத்தைத் தெரிந்துகொண்டே கோயிலுக்குள் செல்லலாம். மதுரையை அடுத்த வாதவூரிலே மாணிக்க வாசகர் பிறக்கிறார். பல கலைகளையும் இளவயதிலேயே கற்கிறார். இவருடைய அறிவுடைமையைக் கேட்டு, அரிமர்த்தன பாண்டியன் இவரைத் தனக்கு அமைச்சராக ஆக்கிக்கொள்கிறான். இவரிடம் நாற்பத்தொன்பது கோடி பொன் கொடுத்து, கீழ்க் கடற்கரைக்குச் சென்று அங்கு அராபியர் கொண்டுவரும் குதிரைகளை வாங்கி வரச் சொல்கிறான். அமைச்சரான வாதவூரரும் திருப்பெருந்துறை வந்து சேருகிறார்.

அங்கு குருந்த மரத்தடியில் ஒரு முனிவர் உட்கார்ந்து தம் சீடர் சிலருக்குச் சிவஞானபோதம் உபதேசித்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்கிறார் வாதவூரர். அந்தக் குருவினிடம் ஒரு பக்தி உண்டாகிறது. தம்மை மறக்கிறார். பின்னர் தம்மை இப்படித் தடுத்து ஆட்கொள்ள எழுந்த குருமூர்த்தி இறைவனே என்பதை உணர்கிறார். கொண்டு வந்த பணத்தையெல்லாம் அந்த இறைவனுக்குக் கோயில் கட்டுவதிலேயே செலவு செய்கிறார். விஷயம் எட்டுகிறது பாண்டியனுக்கு. அரசன் அவரை மதுரைக்கு அழைக்கிறான். குதிரைகள் என்ன ஆயின என்று கேட்கிறான். இறைவன் அருளியபடி, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று கூறுகிறார். வாதவூரர் சொன்னபடியே இறைவனும், திருப்பெருந்துறைக் காட்டிலுள்ள நரிகளையெல்லாம் பரிகளாக்கி அவைகளை ஓட்டிக்கொண்டு மதுரைக்கு