பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

வேங்கடம் முதல் குமரி வரை

வருகிறான் ராவுத்தனாக. பரிகளை எல்லாம் லாயத்தில் கட்டி வைக்கிறார்கள். ஆனால் இரவுக்கிரவே பரிகள் பழையபடி நரிகளாகி மற்றக் குதிரைகளையும் கடித்துக்குதறிவிட்டு ஓடிவிடுகின்றன.

மன்னன் இது அறிந்து வாதவூரரைச் சிறையில் அடைக்கிறான்; துன்புறுத்துகிறான், திரும்பவும் இறைவன் மண் சுமக்கும் கூலியாளாக வந்து மன்னனிடம் அடிபடுகிறான். தனது திருக்கோலத்தையும் காட்டுகிறான். வாதவூரரும் சிறை நீங்கி இறைவன் புகழை மணி மணியான பாடல்களில் பாடி மகிழ்கிறார். தல யாத்திரையையே துவக்குகிறார். இந்த மணிவாசகர் பாடியதே திருவாசகம். அந்தத் திருவாசகம் எழுவதற்குக் காரணமாக இருந்த தலம் தான் இந்தத் திருப்பெருந்துறை.

நரியைக் குதிரைப் பரியாக்கி
ஞாலமெல்லாம் நிகழ்வித்து
பெரிய தென்னன் மதுரையெலாம்
பிச்சதேற்றும் பெருந்துறையாய்!

என்பதுதானே மணிவாசகரது பாடல், இந்த மணிவாசகரையும் அவருக்காகக் குதிரை விற்க வந்த இறைவனையும் காணவே நாம் இந்தத் தொலை தூரத்தில் உள்ள திருப்பெருந்துறைக்கு வந்திருக்கிறோம்.

பெருந்துறைக் கோயில்வாயில்