பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/171

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

157

சண்பகாரண்யமாக இருந்திருக்க வேணும்.

இன்றைய தலவிருட்சம் புன்னையும் இங்கே தான் இருக்கிறது. இதற்குள்ளேதான் கருடப் பிரகாரம். இதையும்

கோயில் - மன்னார்குடி

கடந்தே தான் கரு வறையைச் சுற்றியுள்ள திரு உண்ணாழிப் பிரகாரம். இந்தப் பிரகாரங்களில் எல்லாம் எத்தனையோ மண்டபங்கள். இத்தனையும் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்தாலே கோயில் எத்தனை பெரியது என்று தெரியும். இந்தக் கோயிலை, இந்தக் கோயிலின் காசிப் பிரகாரத்தைச் சுற்றி நிற்கும் மதில் வானளாவி நிற்கும். திருவாரூர்த் தேர் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு, வேதாரண்யம் விளக்கு அழகு, காஞ்சீபுரம் குடை அழகு, திருவரங்கம் நடை அழகு என்பது போல் மன்னார்குடி மதில் அழகு என்பதும் பிரசித்தமானதாயிற்றே. இந்த மதில், இந்தப் பிரகாரம், இந்த மண்டபங்கள் எல்லாவற்றையும் கடந்தே கருவறையில் இருக்கும் பெருமாளைச் சேவிக்க வேணும்.

அங்குள்ள மூலவர் வாசுதேவன் நான்கு திருக்கைகளோடு சேவை சாதிப்பான், இவர் பிரம்மாவாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பர். இவருக்கு முன்னால் உத்சவ மூர்த்தியாய் எழுந்தருளியிருப்பவரே ராஜகோபாலன், வலக்கையில் மாடு மேய்க்கும் கோலும் இடக்கையை