பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

வேங்கடம் முதல் குமரி வரை

என்பதுதானே அவனது சித்தாந்தம். இந்தக் கம்பனையும் முந்திக்கொண்டு அந்த இளங்கோ அடிகளும் இந்த ராமப் பிரபாவத்தை நிறைந்த சொற்களால் கூறி மகிழ்கிறாரே.

மூவுலகும் ஈர் அடியால்
முறை நிரம்பா வகை மூடிய
தாவிய சேவடி சேப்ப
தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடிய -
தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத
செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத
செவி என்ன செவியே?

என்றுதானே ஆய்ச்சியர் குரவையில் பாடுகிறார் அவர், ஆதலால் அறம்தலை நிறுத்த வந்த தலைமகனான ராமன் தமிழ் நாட்டுக்குள் எவ்வளவோ காலத்துக்கு முன்பே வந்திருக்கிறான். என்றாலும் அவனை வீடும் குடியுமாக இங்கே இருத்தி அவனுக்குக்கோயில்கள் எழுப்பித்து அங்கெல்லாம் அவனை மக்கள் பணிந்து வணங்கி எழுவதற்கெல்லாம் வகை செய்தவன் கம்பன். சோழ நாட்டில் ராமனுக்குக் கோயில்கள் எழுந்ததெல்லாம் கம்பன் காலத்துக்குப் பின்தான். இப்படி எழுந்த கோயில்களில் ஒன்றே வடுவூர் கோதண்டராமன் கோயில். அந்த வடுவூருக்கே செல்கிறோம், நாம் இன்று.

வடுவூர் தஞ்சை ஜில்லாவிலே. தஞ்சைக்குத் தென் கிழக்கே பதினான்கு மைல் தூரத்திலுள்ள சிறிய ஊர். முன்னர் சென்றிருந்த திவ்ய தேசமான ராஜமன்னார் குடிக்கு மேற்கே ஒன்பது மைலில் இருக்கிறது. தஞ்சையில் இறங்கித் தஞ்சைமன்னார்குடி (வடுவூர் வழி) பஸ்ஸில் ஏறி வடுவூர் செல்லலாம். இல்லை, கார் வைத்துக்கொண்டும் அந்தத் தலத்துக்குச்