பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

169

காவிரிக் கரையிலுள்ள ராமனை, அர்ச்சகர்கள் 'காவேரி தீர ரஸிகாயா நமா ஓம்' என்று அர்ச்சித்து மகிழ்கிறார்கள், உண்மைதானே? கங்கைக் கரையில் பிறந்த ராமன் காவிரிக்கரையில் அல்லவா வந்து நிலைத்திருக்கிறான். கும்பகோணம் போயிருந்தபோது அங்குள்ள ராமசாமி கோயிலில் பட்டாபிராமனைப் பார்த்தோம். இன்றோ வடுவூர்கோதண்ட ராமனைப் பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் வசதி செய்து கொள்ளக் கூடுமானால் தில்லை விளாகம் ராமன், அடம்பர் ராமன், முடிகொண்டான் ராமன் முதலியவர்களையும் தரிசித்து மகிழலாம்.

திருத்துறைப் பூண்டி - பட்டுக்கோட்டை பாதையில் ரோட்டை விட்டுக் கொஞ்சம் விலகிக் கிழக்கு நோக்கிச் சென்றால் தில்லைவிளாகம் ராமனைக் காணலாம். அலங்கரிக்கப்பட்ட பெரிய மேடையில் சர்வாலங்கார பூஷிதனாக லக்ஷ்மணனுடனும் சீதையுடனும் அனுமனுடனும் அங்கு நின்று கொண்டிருப்பான். இவர்களை அடுத்த தனிக்கோயிலில் நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகரும் இருப்பார்கள். எல்லோருமே ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன் பூமிக்கடியில் இருந்து வெளிவந்தவர்கள்தானாம். இதற்கு எதிர்த் திசையில் மாயூரம் - திருவாரூர் பாதையில் பூந்தோட்டத்தை அடுத்து முடிகொண்டான் என்று ஒரு சிற்றூர். அங்குள்ள தனிக்கோயிலிலும் ராமன், சீதா லக்ஷ்மண சமேதனாக நிற்கிறான். இவர்களையெல்லாம் விட அழகனாக நிற்கும் ராமனைக் காண அடம்பர் என்ற ஊருக்கே செல்லவேணும். தஞ்சை ஜில்லாவிலே, திருவாரூருக்கு வடக்கேயுள்ள நன்னிலம் போய், அங்கிருந்து மேற்கு நோக்கி நான்கு மைல்கள் சென்றால் அடம்பர் என்ற ஊருக்கு வருவோம். அந்த ஊரைப் பற்றி ஒரு பாட்டு :

ஆயிரம் வேலி அதம்பார்.
ஆனை கட்டும் தாள்
வானை முட்டும் போர் -- அதில்