பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19. தஞ்சைப்பெரு உடையார்

ஆயிரம் வருஷங்களுக்கு முன் தஞ்சையிலிருந்து அரசாண்ட சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான ராஜராஜன் ஒரு நாள் மாலை தஞ்சை நகரின் வெளிப்புறத்திலே உலாவப் புறப்படுகிறான். அவனை வளர்ப்பதில், அவன் ராஜ்யபாரம் செய்வதில் எல்லாம் மிகுந்த அக்கறை காட்டுகின்ற அவன் தமக்கை குந்தவையும் உடன் வருகிறாள். அவன் பட்டம் ஏற்றது கி.பி. 986-ல். பட்டம் ஏற்ற உடனேயே திக்விஜயம் செய்து, வெற்றிக்கு மேல் வெற்றி கண்டு அப்போதுதான் தலைநகர் திரும்பியிருக்கிறான். சேரர், பாண்டியர், பல்லவர், சளுக்கர் எல்லோருமே இவனுக்கு அடிபணிந்திருக்கிறார்கள். அவர்கள் நாடுகள் எல்லாமே சோழ மண்டலத்தின் கீழ் அடங்கியிருக்கின்றன.

காந்தளூரில் கலம் அறுத்து, பாண்டியன் அமர புஜங்கனை முறியடித்து, கங்கபாடியையும் அடிமை கொண்டு, நுளம்பப் பாடியைக் கைப்பற்றி, குடமலை கொல்லம் கலிங்கம் முதலிய நாடுகளின் பேரிலும் படையோடு சென்று வெற்றி கண்டதோடு நிற்கவில்லை அவன். கடல் கடந்து சென்றிருக்கிறான்; ஈழ நாட்டை மும்முடிச் சோழ