பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

வேங்கடம் முதல் குமரி வரை

மண்டலமாக்கியிருக்கிறான்; அலை கடல் நடுவில் பலகலம் செலுத்தி முந்நீர் பழந்தீவு பன்னீராயிரத்தையும் கைக் கொண்டு ஜயங்கொண்ட சோழனாகவே திரும்பியிருக்கிறான். அவனது போர் அனுபவங்களையும் அவனது வெற்றிப் பிரதாபங்களையும் அவன் வாயிலாகவே கேட்டு மகிழ்கிறாள் அவனது தமக்கையார். இப்படி உரையாடிக் கொண்டே இருவரும் வந்து சேருகிறார்கள் ஒரு சோலைக்கு. அங்குள்ள குளத்தையும் அக்குளத்தின் நடுவிலே லிங்கத் திருவுருவிலே இறைவன் கோயில் கொண்டிருப்பதையும் காண்கிறார்கள். .

‘விண்ணிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய் எண்ணிறந்து எல்லை இல்லாதானாகப் பரந்து நிற்கும் இறைவனுக்கா இப்பெரிய சாம்ராஜ்யத்தில் இத்தனை சிறிய கோயில்?' என்று நினைக்கிறான் ராஜராஜன். அதே எண்ணம் எழுகிறது தமக்கை குந்தவைக்கும். கேட்கிறாள் அவள் தம்பியிடம் : ‘தம்பி! இந்தத் தஞ்சைத் தலைநகரிலே உனது சிறந்த ஆட்சியிலே இந்தத் தளிக்குளத்து இறைவனுக்கு இத்தனை சிறிய கோயில் இருப்பது உனது புகழுக்கு ஏற்றதாகுமா?' என்று. ஆம். அக்கா! நானும் அப்படியேதான் நினைத்தேன் இப்போது. இனிமேல் செய்ய வேண்டியது என்ன என்பதையும் சிந்தித்துக்கொண்டே வந்தேன். சரி. இந்தத் தளிக்குளத்து இறைவனையே பெருஉடையாராக அமைத்து, அந்தப் பெரு உடையாருக்கு ஏற்ற ஒரு பெரிய கோயிலையும் : கட்டிவிட வேண்டியதுதான், என்று தீர்மானித்து விட்டேன்' என்கிறான்.

இந்தச் சிந்தனையில் பிறக்கிறது தஞ்சைப் பெரிய கோயில். கிட்டத்தட்ட ஏழு வருஷகாலம் கோயில் கட்டும் திருப்பணி நடக்கிறது. ராஜராஜனது முழுக் கவனமும் கோயில் கட்டுவதிலேயே இருக்கிறது. தன் உடைமை யெல்லாம் கொடுக்கிறான் ராஜராஜன், இந்தக் கோயில் கட்ட. அவனது மனைவியர் எல்லாம் வாரி வழங்குகிறார்கள். அவன் தமக்கை குந்தவையுமே பொன்னும் பொருளும் கொடுத்து