பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

173

உதவுகிறாள்; 'நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' சேர்ந்து இக்கோயில் உருவாகுகிறது என்று பெருமையோடு பொறிக்கிறான் இராஜராஜன். இந்த ராஜராஜன் கட்டிய பெரிய கோயிலையே மக்கள் ராஜராஜேச்சுரம் என்று அருமையாக அழைக்கிறார்கள். அங்கு பெரு உடையார் என்னும் பிரஹதீசுவரர் கோவில் கொள்கிறார். இந்த தஞ்சைப் பெருவுடையாரின் பெரிய கோயிலுக்கே செல்கிறோம், நாம் இன்று.

தஞ்சாவூர் எங்கிருக்கிறது? அதற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று நான் சொல்லித்தான் வாசக நேயர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது இல்லை. ஆனால் இந்த ஊருக்கு தஞ்சாவூர் என்று ஏன் பெயர் வந்தது?. யாராவது இங்கு வந்து தஞ்சம் புகுந்தார்களா என்ற கேள்விக்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆதியில் குபேரன் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டிருக்கிறான். மேலும் இந்தத் தலத்தில்தான் பராசர முனிவர் தவம் செய்திருக்கிறார். முனிவர் தவம் செய்கிறார் என்றால் அதைக் கெடுக்கத்தான் அசுரர்கள் புறப்பட்டு விடுவார்களே! தஞ்சன், தாரகன், தாண்டகன் என்னும் அசுரர்கள் பராசரரைத் துன்புறுத்துகிறார்கள்.

அவரோ விஷ்ணுவினிடமும், துர்க்கையிடமும் முறையிடுகிறார். இருவரும் அசுரர்களுடன் போர் ஏற்கிறார் கள்: விஷ்ணு தஞ்சன், தாண்டகனைச் சம்ஹரிக்கிறார். துர்க்கை தாரகனை வெற்றி காண்கிறாள். இறக்கும் தறுவாயில் தஞ்சன் விஷ்ணுவினிடம் அன்று முதல் அந்தத் தலம் தன் பெயரால் அழைக்கப்படவேண்டும் என்று வரம்கேட்கிறான். அதனாலேயே தஞ்சன் ஊர் தஞ்சாவூர் என்று பெயர் பெறலாயிற்று என்று புராண வரலாறு கூறுகிறது (தஞ்சனைப் போலவே தாண்டகனும் தாரகனும் வேண்டிக் கொண்டிருந்தால் தஞ்சையை அடுத்தே ஒரு