பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/188

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

வேங்கடம் முதல் குமரி வரை

தாண்டகபுரி, தாரக நகரும் தோன்றியிருத்தல் கூடும். பைத்தியக்காரர்கள் கோட்டை விட்டு விட்டார்கள்!). வெற்றி கொண்ட விஷ்ணுவும், துர்க்கையும் ஊருக்கு வட பக்கத்தில் கோயில்களில் அமர்ந்திருக்கிறார்கள். தஞ்சையில் வட எல்லையிலே உள்ள திருவுடைக் கோடி அம்மனோ துர்க்கையின் அம்சம். தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் வெண்ணாற்றங்கரையிலே நீலமேகப் பெருமாள், மணிகுன்னப் பெருமாள், சிங்கப் பெருமாள் எல்லாம் இடம்பிடித்து அமர்ந்து கொள்கின்றனர்.

வம்புலாம் சோலை மாமதிள்
தஞ்சை மாமணிக்
கோயிலே வணங்கி

நம்பிகாள் உய்ய நான்
கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்

என்று இந்த மாமணிக் கோயிலில் உள்ள மணிவண்ணனை வாயாரப் பாடி மகிழ்ந்திருக்கிறாரே திருமங்கை மன்னன். திருவையாறு செல்லும் வழியில் இவரைத் தரிசித்து வணங்கிக் கொள்ளலாம்.

இப்படி எல்லாம் பிரசித்தி அடைந்தவர்கள் விஷ்ணுவும் துர்க்கையும் என்றாலும் பிராபல்யம் எல்லாம் பெரு உடையார்க்குத்தான். அவருக்குத்தானே பெரிய கோயில். கோயில் என்றால் சைவர்களுக்குச் சிதம்பரமும், வைணவர் களுக்கு ஸ்ரீரங்கமுமே ஆகும். ஆனால் தமிழ் நாட்டில் பெரிய கோயில் என்று மட்டும் குறிப்பிட்டால் அது தஞ்சைப் பெரிய கோயிலைத்தான் குறிக்கும். இனி இந்தக் கோயிலைக் காணப் புறப்படலாம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஐந்து, ஆறு பர்லாங்கு தூரத்தில் கோயில் இருக்கிறது. ஆனால் அந்தக் கோயில் விமானம் ரயிலில் வரும்போதே ஐந்தாறு மைல் தொலைவில் தெரியும். கோயிலைச் சுற்றியிருப்பது ஒரு பெரிய