பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

175

அகழி. தளிக்குளத்தில் இருந்த இறைவன் அல்லவா? அதனால் குளத்தைத் தூர்த்தாலும் அகழி வெட்டி வைக்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது அரசனுக்கு. வடபக்கத்தில் அகழி தூர்ந்தே போய்க் கட்டிடங்கள் கிளம்பி விட்டன. கீழ்ப்பக்கம் தூர்ந்துகொண்டு வருகிறது. மேல்புறம் அகழியில் மீன் வளர்க்கிறார்கள். தென்பக்கத்து அகழியைத்தான் புதிதாக வெட்டிய கிராண்ட் அணைக்கட்டு கால்வாய் செல்லும் பாதையாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள் பொதுத்துறைப் பணியாளர்கள்.

ஆதலால் அகழியைக் கடப்பது என்ற பிரச்னை இன்று இல்லை. இக்கோயிலின் முதல் வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். அடையாத வாயில் அகம் அது. அதற்குக் கதவு கிடையாது. இதனையே கேரளாந்தகன் திருவாசல் என்று அழைத்திருக்கிறான் அரசன். இதனைக் கடந்தே அடுத்த ராஜராஜன் திருவாயிலுக்கு வரவேணும். அந்த வாயிலின் இருபக்கமும் உள்ள கல் சுவர்களில் சிறிய சிறிய சிற்ப வடிவங்கள் இருக்கும். அவை பலப்பல கதைகளை விரிக்கும். அப்படி விரிக்கும் கதைகளில் ஒன்று அன்று இறைவன் கிராத வேடத்தில் வந்து அர்ச்சனனுக்குப் பாசுபதம் வழங்கியது. இந்த வாயிலில் நின்று கோயில் விமானத்தை நிமிர்ந்து நோக்கினால் நமது நெஞ்சு விரியும், நமது சிந்தனை உயர்ந்து ஓங்கும். ராஜராஜன் தன் முழுக்கவனத்தையும் இவ்விமானம் கட்டுவதில் தானே செலவழித்திருக்கிறான், வட இமயத்தினில் ஓர் உத்தரமேரு இருக்கிறது என்றால் தென் தமிழ் நாட்டில் ஒரு தக்ஷிண மேருவை உருவாக்குவேன் என்று சவால் விட்டுக்கொண்டு கட்டிய விமானம் அல்லவா?

கருவறை மேல் 96 அடி சதுரமான அடித்தளத்தின் பேரில் 216 அடி உயரம் விமானம் உயர்ந்திருக்கிறது. இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் இந்த விமானம் உபானம் முதல் ஸ்தூபிவரை கல்லாலேயே கட்டப்பட்டிருப்பதுதான், மலையே இல்லாத தஞ்சை ஜில்லாவிலே முழுக்கக்