பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

வேங்கடம் முதல் குமரி வரை

கல்லாலேயே கோயில், விமானம் எல்லாம் கட்டுவதென்றால் அதற்கு எவ்வளவு துணிவு இருந்திருக்கவேண்டும். இந்த விமானத்தின் உச்சியிலே ஏற்றியிருக்கிறார்கள் இருபத்து ஐந்து அடி சதுரம் உள்ள ஒரு பிரமாந்திரத் தளக்கல்லை, அதன் எடை 'எண்பது டன் என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தக் கல், அழகி என்ற கிழவி வீட்டுப் பக்கம் இருந்ததாகவும் அதையே சிற்பிகள் நாலு மைல் தூரத்துக்குச் சாரம் கட்டி விமானத்தின் பேரில் ஏற்றினார்கள் என்றும் சொல்கிறார்கள. ஆம். பெருவுடையாரே ஒத்துக் கொண்டிருக்கிறாரே, ராஜராஜன் கட்டிய கோயிலில் இருந்தாலும் கிழவி தந்த நிழலிலே தாம் ஒதுங்கியிருப்பதாக. எந்த ஊரிலிருந்து சாரம் தொடங்கிற்றோ அந்த ஊர் இன்றும் சாரப்பள்ளம் என்று வழங்குகிறதே.

தஞ்சை பெரிய கோயில்

இந்த விமானத்தின் உச்சியில் உள்ள கலசம் பன்னிரண்டு அடி உயரம். 3083 பலம் நிறையுள்ள செம்பினால் ஆயது. இதன் மேல் 2926 கழஞ்சு பொன்பூசிய தகடு, வீரபத்ர ஆச்சாரி கொடுத்த பஞ்ச லோகக் கம்பத்தில் சோழ சிங்காசனாபதி கொடுத்த இந்தக் குடம் இருத்தப்பட்டது