பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/192

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

வேங்கடம் முதல் குமரி வரை

கருவறையிலேயே போக சக்தி அம்மன் செப்புச் சிலை வடிவில் இருக்கிற அழகையும் காணலாம்.

இனிக் கோயிலை விட்டு வெளியே வரலாம். வெளியே இருக்கும் பைரவர், மேல்புறம் உள்ள விநாயகர், கருவூரார், சுப்பிரமணியர் சந்நிதியில் எல்லாம் சென்று வணங்கலாம். சுப்பிரமணியர் கோயில் ராஜராஜன் கட்டியது அல்ல. பின்னால் நாயக்க மன்னர்கள் கட்டியிருக்கிறார்கள். நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த எண்ணற்ற சிற்ப வடிவங்கள் அங்கு. அதில் களத்தில் விழுந்துவிட்ட படைத்தலைவனைப் பாசறைக்கு எடுத்துச் செல்லும் யானையின் வடிவம் ஒரே சோக சித்திரம். இதைக் காணாது திரும்பி விட்டால் ஒரு பெரிய புதையலையே இழந்தவர்கள் நீங்கள் என்பேன் நான். இப்படியெல்லாம் சுற்றி விட்டே அம்மன் சந்நிதிக்கு வரவேணும். அங்கு தெற்கு நோக்கிக் கம்பீரமாகப் பத்தடி உயரத்தில் பெரியநாயகி நிற்பாள். இந்தச் சந்நிதிகூட நாயக்க மன்னர்கள் காலத்தில்தான் கட்டப்பட்டிருக்க வேணும்.

இந்தப் பெரிய நாயகியை வணங்கிய பின், இந்தக் கோயிலுக்குத் தென்பக்க்ததிலுள்ள நடராஜர் சந்நிதிக்கு வரலாம். அங்கு மேடை மீது செப்புச்சிலை வடிவில் நடராஜரும் சிவகாமியும் நின்று கொண்டிருப்பார்கள். நடராஜர் நேரே நம்மைப் பார்த்து அருள் புரியமாட்டார், அவர் முகத்தைத் திருப்பிக் கடைக் கண்ணால் சிவகாமியையே பார்ப்பார். அவரது அருளை நாம் பெறுவது, அன்னை சிவகாமி மூலம்தானே. இவரையே ஆடவல்லான் என்று அழைத்திருக்கிறான் ராஜராஜன். அளக்கும் கருவிகளுக்கும் ஆடவல்லான் என்ற பெயரைச் சூட்டியதிலிருந்தே அவனுக்கு இந்த ஆடவல்லானிடம் எத்தனை ஈடுபாடு என்று தெரியும்.

இத்தனை பார்த்த பின்னும் அவகாசம் இருந்தால் மேல ராஜவீதி சென்று பங்காரு காமாக்ஷி என்னும் தங்கக் காமாக்ஷியம்னைத் தரிசிக்கலாம். வடக்கு வீதி வழியாய்